Wednesday, October 15மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: double murder

‘அந்நியன்’ வாலிபரால் உறைந்த ‘முட்டை’ மாவட்ட கிராமம்!! ”பத்து தலையாவது உருண்டுருக்கும் ரெண்டு உசுரோட போச்சு!”

‘அந்நியன்’ வாலிபரால் உறைந்த ‘முட்டை’ மாவட்ட கிராமம்!! ”பத்து தலையாவது உருண்டுருக்கும் ரெண்டு உசுரோட போச்சு!”

குற்றம், நாமக்கல், முக்கிய செய்திகள்
''அய்யோ... இப்ப வரைக்கும் எங்களுக்கு அந்த படபடப்பும் பயமும் போகலைங்க. ஈரக்குலையெல்லாம் நடுங்கிப் போச்சுங்க சார். சம்பவம் நடந்து மூணு நாளாச்சு. உங்ககிட்ட பேசும்போதுகூட எங்க முகமெல்லாம் குப்புனு வேர்த்துப் போச்சு பாருங்க...,'' என கொஞ்சமும் பதற்றம் தணியாமல் பேசினர், பாலப்பாளையம் கிராம மக்கள். நாமக்கல் மாவட்டம் ஆண்டகளூர் கேட்டில் இருந்து திருச்செங்கோடு சாலையில் இருக்கிறது, இந்த கிராமம். பாலப்பாளையம் உப்பிலிய நாயக்கர் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மனைவி அஞ்சலை. கூலித்தொழிலாளிகள். இவர்களுக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன், மதியழகன். திருமணமாகி விட்டது. பெரம்பலூரில் அரசுப்பள்ளி ஆசிரியராக இருக்கிறார். இரண்டாவது மகன், கோடீஸ்வரன் (31). எம்.எஸ்சி., பி.எட்., கணிதம் படித்திருக்கிறார். பெற்றோருக்கு எழுதப்படிக்கத் தெரியாவிட்டாலும், மகன்களை படித்து ஆளாக்கியுள்ளனர். ...