Sunday, November 9மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: doctor ilango

டெங்கு காய்ச்சலுக்கு 250 பேர் பலி: தனியார் மருத்துவமனைகளுக்கு மிரட்டல்?

டெங்கு காய்ச்சலுக்கு 250 பேர் பலி: தனியார் மருத்துவமனைகளுக்கு மிரட்டல்?

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவும் வேகத்திற்கு இணையாக, முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் இல்லாததால், டெங்கு மரணங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. ஆனால், அரசு தரப்போ, டெங்கு மரணங்களை ஒட்டுமொத்தமாக மறைக்கும் முயற்சியில் கவனம் செலுத்தி வருகிறது. எப்படி பரவுகிறது?: 'ஏடிஸ்' என்ற ஒரு வகை பெண் கொசுக்கள் மனிதர்களைக் கடிப்பதன் மூலம் டெங்கு வைரஸ் உடலில் நுழைவதால், டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. இதில் டெங்கு 1, 2, 3, 4 என்று நான்கு வகைகள் உள்ளன. 3 மற்றும் 4ம் வகை டெங்கு காய்ச்சல் கொடூரமானது என்கிறது மருத்துவத்துறை. ஏடிஸ் வகை கொசுக்கள் பகலில் கடிக்கக் கூடியது. தேங்கியுள்ள சுத்தமான நீர் ஆதாரங்களில் இந்த கொசுக்கள் உற்பத்தி ஆகின்றன. மரணத்தை ஏற்படுத்தும்: டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவரின் உடல் ரத்தத்தில் உள்ள தட்டை அணுக்கள் (பிளேட்டிலெட்) எண்ணிக்கை வேகமாக குறையும். சராசரியாக ஒருவரது ரத்த...