கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு: சுவாதியின் தாயாரும் பல்டி! அரசுத்தரப்பு அதிருப்தி!! #Gokulraj #Day6
கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில், அரசுத்தரப்பு முக்கிய சாட்சியான சுவாதியைப் போலவே, அவருடைய தாயார் செல்வியும், பிறழ் சாட்சியம் அளித்ததால் அரசுத்தரப்பினர் அதிருப்தி அடைந்தனர்.
தலை துண்டிக்கப்பட்ட நிலையில்..:
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த வெங்கடாசலம் - சித்ரா தம்பதியின் மகன் கோகுல்ராஜ் (23). பொறியியல் பட்டதாரி. திருச்செங்கோடு கேஎஸ்ஆர் பொறியியல் கல்லூரியில் கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் படிப்பை நிறைவு செய்திருந்தார்.
தன்னுடன் வகுப்பில் ஒன்றாக படித்து வந்த, நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள நடந்த கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி மகள் சுவாதியுடன் நெருங்கிப் பழகி வந்தார் கோகுல்ராஜ்.
கடந்த 23.6.2015ம் தேதி வீட்டில் இருந்து கிளம்பிச் சென்ற கோகுல்ராஜ், மறுநாள் 24.6.2015ம் தேதியன்று மாலையில் நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் தலை துண...

