Saturday, October 18மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: Congress Party senior leader Peter Alphones said

சிபிஐ விசாரணை தேவை – முனுசாமி அடம்

சிபிஐ விசாரணை தேவை – முனுசாமி அடம்

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை அணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை அறிவித்துள்ள நிலையில், சிபிஐ விசாரணைதான் வேண்டும் என்று ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கே.பி.முனுசாமி கூறுகையில், ''ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணையை ஏற்க முடியாது. சிபிஐ தான் விசாரிக்க வேண்டும்,'' என்றார். காங்கிரஸ் கட்சி மூத்தத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறுகையில், ''பாஜகவின் தூண்டுதலின்பேரிலும், ஓபிஎஸ் அணியுடன் இணைவதற்காகவும்தான் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளதாக கருதுகிறேன். வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று முதல்வர் கூறியுள்ளார். அந்த சொத்து யாரிடம் இருக்கிறது? அவரிடம் ஒப்புதல் பெறப்பட்டதா என்பதெல்லாம் தெரியவில்லை,'' என்றார்....