Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: carpet

மத்திய பட்ஜெட்: கார்ப்பரேட்டுக்கு கம்பளம்; சாமானியருக்கு நொம்பளம்!

மத்திய பட்ஜெட்: கார்ப்பரேட்டுக்கு கம்பளம்; சாமானியருக்கு நொம்பளம்!

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
மக்களவையில் இன்று (பிப்ரவரி 1, 2018) தாக்கலான மத்திய பட்ஜெட், கார்ப்பரேட்டுகளுக்கு சலுகைகளையும், நடுத்தரவர்க்கத்தினரை ஏழைகளாகவும் மாற்றும் வகையில் இருப்பதாக மக்களிடம் அதிருப்தி கிளம்பியுள்ளன. 2018&2019ம் ஆண்டுக்கான பட்ஜெட், மக்களவையில் இன்று தாக்கலானது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். கடந்த 2014ல் ஆட்சிக்கு வந்த பாஜக அரசு தாக்கல் செய்யும் அதன் முழு ஆண்டுக்கான கடைசி பட்ஜெட் இதுவாகும். ஒரு பட்ஜெட் அறிக்கை என்பது, எப்போதும் அனைத்துத் தரப்பினரையும் திருப்திப்படுத்தியதாக வராற்றுச் சான்றுகள் இல்லை. மக்கள் நலனை மையப்படுத்திய பட்ஜெட்டாகவே இருந்தாலும் அதை எதிர்ப்பதுதான் எதிர்க்கட்சிகளிடையே நிலவும் பொதுவான போக்குகள். இன்று சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட், ஒட்டுமொத்தமாக மக்களுக்கு விரோதமானது என்று சொல்லிவிடலாகாது. ஆனால், அடுத்து வரவுள்ள சில மாநில சட்டப்பேரவை தேர்தல், அடு