ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் ; 27-7-2017 முதல் 13-2-2019 வரை ; எந்த ராசிக்கு என்ன நடக்கும்?
மேஷம்
ஆளும் குணமும் ஆன்மிக பலமும் அதிகமுள்ளவர்களே! உங்களுக்கு 27.7.2017 முதல் 13.02.2019 வரை உள்ள காலகட்டங்களில் ராகுவும் கேதுவும் எப்படிப்பட்ட பலன்களைத் தரப்போகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.
ராகுவின் பலன்கள்
இதுவரை உங்கள் ராசிக்கு ஐந்தில் அமர்ந்து மன உளைச்சலைத் தந்துகொண்டிருந்த ராகு பகவான், இப்போது உங்கள் ராசிக்கு நான்காவது வீட்டில் வந்தமர்வதால் குழந்தை பாக்கியம் உண்டு. பிள்ளைகள் உங்கள் மீது பாசமாக இருப்பார்கள். மகளுக்குத் திருமணம் நிச்சயமாகும். மகன் கூடாப் பழக்கவழக்கங்களிலிருந்து விடுபடுவார். குல தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பம் விலகும்.
என்றாலும் ராகு 4-ம் வீட்டில் அமர்வதால் தாயாரின் உடல்நலத்தில் அக்கறை காட்டுங்கள். வீட்டை விரிவுபடுத்துவது, அழகுபடுத்துவது, இடித்துக் கட்டுவது போன்ற பராமரிப்புச...