
ஒரு பழமொழி… ஓஹோனு டிரெண்டிங்!; இந்திய அளவில் முதலிடம் பிடித்தார் மு.க.ஸ்டாலின்!#ஸ்டாலின்_பழமொழி
பொது நிகழ்ச்சியில் ஒரே ஒரு பழமொழியைக் கூறியதன் மூலம் இன்று (மார்ச் 23, 2018) இந்திய அளவில் ட்விட்டர் சமூக ஊடகத்தில் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்தார் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.
பொதுக்கூட்டமோ, பொதுநிகழ்ச்சிகளோ அரசியல்வாதிகள் குறிப்பு எழுதி வைத்துக்கொண்டு பேசுவது என்பது உலகளவில் நடைமுறையில் இருந்து வருவதுதான்.
தமிழ்நாட்டு அரசியலைப் பொருத்தவரை, திமுக தலைவர் கருணாநிதி மேடைகளில் பேசும்போது எழுதி வைத்துக்கொண்டு பேசுவதில்லை. எத்தனை ஆண்டுகால வரலாறாக இருந்தாலும், அவர் மூளைக் கிடங்கில் இருந்து துல்லியமான தகவல்கள் சுரந்து கொண்டே இருக்கும்.
கருணாநிதிக்கு நேர் எதிரானவர் ஜெயலலிதா. முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட அறிக்கையின்றி அவர் மேடையேறுவதே இல்லை.
ஆனால் ஒரு பிரபலத்தின் வாரிசாக இருப்பதில் நிறையவே சங்கடங்கள் நிறைந்தது. பெற்றோர் பயணித்த அதே ...