Thursday, October 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: விவசாயிகள்

பெயரளவுக்கு நடந்த எட்டுவழிச்சாலை விசாரணை!; மக்கள் எதிர்ப்பு முழக்கம்; அதிகாரிகள் டென்ஷன்!!

பெயரளவுக்கு நடந்த எட்டுவழிச்சாலை விசாரணை!; மக்கள் எதிர்ப்பு முழக்கம்; அதிகாரிகள் டென்ஷன்!!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்காக, சேலம் மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்தப்பட உள்ள விவசாயிகள், பொதுமக்களிடம் இருந்து ஏற்கனவே ஆட்சேபனை மனுக்கள் பெறப்பட்டு இருந்தது. அந்த மனுக்கள் மீதான சட்டப்பூர்வமான விசாரணை இன்று (ஜூலை 6, 2018) சேலத்தை அடுத்த அயோத்தியாப்பட்டணத்தில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலரும், நில எடுப்புக்கான அதிகாரம் பெற்ற அலுவலருமான சுகுமார், நில உரிமையாளர்களிடம் நேரில் கருத்துகளைக் கேட்டறிந்தார். வெள்ளியம்பட்டி, குள்ளம்பட்டி, மின்னாம்பள்¢ளி, சின்னக்கவுண்டாபுரம் ஆகிய ஊர்களைச் சேர்ந்த மொத்தம் 169 பட்டாதாரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.   விசாரணைக்கு வந்தவர்களிடம் எட்டு வழிச்சாலையால் எத்தனை ஏக்கர் நிலம் பறிபோகிறது?, குடும்பத்தில் எத்தனை உறுப்பினர்கள்? நிலம் கூட்டுப்பட்டாவாக இருக்கிறதா? தனித்தனியாக கிரயம் செய்யப்பட்டுள்ளதா? மகன், மகள்கள் இருந்த...
”விவசாயிகள் மீது எடப்பாடி பழனிசாமி நடத்தும் போர்!”; முன்னாள் எம்எல்ஏ விளாசல்!!

”விவசாயிகள் மீது எடப்பாடி பழனிசாமி நடத்தும் போர்!”; முன்னாள் எம்எல்ஏ விளாசல்!!

அரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள், விவசாயம்
எட்டு வழிச்சாலைத் திட்டம் என்ற பெயரில் விவசாயிகள் மீது எடப்பாடி பழனிசாமி அரசாங்கம் அறிவிக்கப்படாத போரை தொடுத்திருக்கிறது என்று முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஆர்.பார்த்திபன் தெரிவித்துள்ளார்.   விவசாயத்தை நாசமாக்கும் எட்டு வழிச்சாலைத் திட்டம் குறித்து திமுக தேர்தல் பணிக்குழு செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.ஆர்.பார்த்திபன் 'புதிய அகராதி' இணைய ஊடகத்திற்கு அளித்த பேட்டி:   சேலம் - சென்னை இடையேயான பசுமை வழிச்சாலை எனப்படும் எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்காக ஐந்தாவது நாளாக இன்று (ஜூன் 22, 2018) மாசிநாயக்கன்பட்டி, உடையாப்பட்டி திமுக தேர்தல் பணிக்குழு செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான தமிழக அரசு, எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்காக காவல்துறையினர் மூலம் விவசாயிகளை துப்பாக்கி முனையில் மிரட்டி அவர்களின் நிலங்களை கையகப்படுத்துகிறது. அவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி விட்ட...