Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: நியூசிலாந்து

நியூஸிலாந்தை துவம்சம் செய்தது இந்தியா;  தொடரை வென்று சாதனை

நியூஸிலாந்தை துவம்சம் செய்தது இந்தியா; தொடரை வென்று சாதனை

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
திருவனந்தபுரத்தில் இன்று (நவம்பர் 7, 2017) நடந்த நியூஸிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்று, 2-1 கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்தியா வந்துள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணி, 3 ஒரு நாள் மற்றும் 3 இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியது. டெல்லியில் நடந்த முதல் இருபது ஓவர் போட்டியில் இந்தியாவும், ராஜ்கோட்டில் நடந்த இரண்டாவது போட்டியில் நியூஸிலாந்தும் வென்று 1-1 கணக்கில் சமநிலையில் இருந்தன. இந்நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடந்தது. இந்த போட்டியில் வெல்லும் அணி தொடரை வெல்லும் என்பதால் இன்றைய ஆட்டம் இரு அணிகளுக்குமே முக்கியத்துவம் வாய் ந்ததாக இருந்தது. மேலும், 29 ஆண்டுகளுக்குப் பிறகு திருவனந்தபுரம் மைதானத்தில் ஐசிசி போட்டி நடப்பதால் எதிர்பார்த்ததைவிட ரசிகர
கோஹ்லி சதம் வீண்; பந்து வீச்சு சொதப்பல்; நியூசிலாந்து அபார வெற்றி

கோஹ்லி சதம் வீண்; பந்து வீச்சு சொதப்பல்; நியூசிலாந்து அபார வெற்றி

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பகலிரவு ஆட்டமாக இன்று (அக். 22, 2017) நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான் ஆகியோர் பெரிய அளவில் ரன்களை குவிக்கத் தவறினர். இந்திய அணி தரப்பில் கேப்டன் விராட் கோஹ்லி அதிகபட்சமாக 121 ரன்கள் குவித்தார். அவருக்கு அடுத்து, தினேஷ்கார்த்திக் 37 ரன்கள் எடுத்ததுதான் இந்திய அணி வீரர்களின் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 280 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து தரப்பில், அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் அதிகபட்சமாக 4 விக்கெட