Monday, March 2மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: சுனில் பாலிவால்.

பாரதியார் பல்கலை விவகாரம்; சிபிஐ விசாரணை தேவையில்லை!; சுனில் பாலிவால்

பாரதியார் பல்கலை விவகாரம்; சிபிஐ விசாரணை தேவையில்லை!; சுனில் பாலிவால்

கோயம்பத்தூர், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பாரதியார் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் பணி நியமனங்களில் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் புகார் குறித்து சிபிஐ விசாரணை தேவை இல்லை என்று தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் சுனில் பாலிவால் கூறியுள்ளார். கோயம்பத்தூர் பாரதியார் பல்கலை துணை வேந்தராக இருந்த கணபதியை, லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் கடந்த 3ம் தேதி கைது செய்தனர். உதவி பேராசிரியர் சுரேஷ் என்பவரிடம் 30 லட்சம் ரூபாய் லஞ்சமாக பெற்றபோது கையும் களவுமாக பிடிபட்டார். தமிழக உயர்கல்வித்துறை வரலாற்றில் பணியில் இருக்கும் துணை வேந்தர் ஒருவர், லஞ்ச புகாரில் கைது செய்யப்படுவது இதுவே முதல்முறை. கணபதி, துணை வேந்தராக பொறுப்பேற்றதில் இருந்து நடந்த அனைத்து பணி நியமனங்களிலும் லஞ்சமும், ஊழலும் தலைவிரித்தாடியதாகவும், ஆட்சியாளர்களுக்கும் அதில் தொடர்பு இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் புகார்கள் கூறின. மேலும், இது தொடர்பாக சிபிஐ போலீசார் விசாரணை ந...
பெரியார் பல்கலை முன்னாள் பதிவாளர் திடீர் தற்கொலை ஏன்?;  கைது நடவடிக்கைக்கு பயந்து விஷம் குடித்தாரா?; திடுக்கிடும் தகவல்கள்!

பெரியார் பல்கலை முன்னாள் பதிவாளர் திடீர் தற்கொலை ஏன்?; கைது நடவடிக்கைக்கு பயந்து விஷம் குடித்தாரா?; திடுக்கிடும் தகவல்கள்!

அரசியல், ஈரோடு, கல்வி, சிறப்பு கட்டுரைகள், சென்னை, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் பெரியார் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் அங்கமுத்து (58) திடீரென்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதன் பின்னணியில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள தோப்புப்பாளையத்தைச் சேர்ந்தவர் அங்கமுத்து (58). சேலம் பெரியார் பல்கலையில் உடல்கல்வி இயக்குநராக பணியாற்றி வந்தார். நேற்று (டிசம்பர் 18, 2017) காலை அவர் வீட்டில் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கிக் கிடந்தார். இதையறிந்த அவருடைய மனைவி விஜயலட்சுமி, உடனடியாக அருகில் உள்ள தன்வந்திரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு கைவிரித்த நிலையில், கணவரை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் செல்லும் வழியிலேயே அங்கமுத்து இறந்துவிட்டது தெரியவந்தது. இதுபற்றி தகவல் அறிந்த பெருந்துறை காவல் நிலைய உதவி ஆய்வாளர் தங்கவேல், தற்கொலை வழக்காக பதிவு செய்து விசாரித்து வருகிறார். அவர...