Wednesday, October 15மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: சாட்சியம்

கோகுல்ராஜ் கொலை வழக்கு: ‘சிறப்பான, தரமான சம்பவங்கள் இனிமேல்தான் வரப்போகுது!’ #Gokulraj #Day17

கோகுல்ராஜ் கொலை வழக்கு: ‘சிறப்பான, தரமான சம்பவங்கள் இனிமேல்தான் வரப்போகுது!’ #Gokulraj #Day17

குற்றம், சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
  கோகுல்ராஜ் கொலை வழக்கில் அரசுத்தரப்பில் அடுத்தடுத்து விஞ்ஞானப்பூர்வ தடயங்கள் பற்றி, சாட்சிகள் வாக்குமூலம் அளிக்க உள்ளனர். அதனால் யுவராஜ் தரப்பு மற்றும் அரசுத்தரப்பு வழக்கறிஞர்களிடையே நீதிமன்றத்தில் அனல் பறக்கும் விவாதங்கள் நடக்கும் என்பதால் இப்போதே எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் (23), கடந்த 2015, ஜூன் 23ம் தேதி சாதி ஆணவப்படுகொலை செய்யப்பட்டார். ஜூன் 24ம் தேதி மாலை, திருச்செங்கோடு கிழக்கு தொட்டிப்பாளையம் அருகே, ரயில் தண்டவாளத்தில் தலை வேறு, உடல் வேறாக துண்டிக்கப்பட்ட நிலையில் கோகுல்ராஜ் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றினர்.   இந்த வழக்கில் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர். குமார் என்கிற சிவக்குமார், சதீஸ் என்கிற சதீஸ்கும...
கோகுல்ராஜ் கொலை வழக்கில் முக்கிய திருப்பம்: சுவாதியை அடையாளம் காட்டிய அரசுத்தரப்பு சாட்சி! சிபிசிஐடி போலீசார் உற்சாகம்!! #Gokulraj #day6

கோகுல்ராஜ் கொலை வழக்கில் முக்கிய திருப்பம்: சுவாதியை அடையாளம் காட்டிய அரசுத்தரப்பு சாட்சி! சிபிசிஐடி போலீசார் உற்சாகம்!! #Gokulraj #day6

சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
பொறியியல் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் அரசுத்தரப்பு சாட்சியான கார்த்திக்ராஜா, சிசிடிவி கேமராவில் பதிவாகியிருப்பது சுவாதியும், கோகுல்ராஜூம்தான் என்று நீதிமன்றத்தில் அடையாளம் காட்டியிருக்கிறார். இதனால் அரசுத்தரப்பினருக்கு புதிய நம்பிக்கை பிறந்துள்ளது.   பொறியியல் பட்டதாரி:   சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த வெங்கடாசலம் மனைவி சித்ரா. கணவர், பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். ஏழை கூலித் தொழிலாளியான சித்ராவுக்கு இரண்டு மகன்கள். மூத்தவர், கலைச்செல்வன். இளைய மகன், கோகுல்ராஜ் (23).   திருச்செங்கோடு கேஎஸ்ஆர் பொறியியல் கல்லூரியில் பி.இ., படித்து வந்த கோகுல்ராஜ், 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் படிப்பை நிறைவு செய்தார். ஆனாலும், அவ்வப்போது நண்பர்களை பார்க்க கல்லூரி பேருந்தில் சென்று வந்துள்ளார். அப்படித்தான், 23.6.2015ம் தேதியன்றும் ஓமலூரில் இருந்து கல...
கோகுல்ராஜ் கொலை வழக்கு: தடம் புரண்ட முக்கிய சாட்சி!; அரசுத்தரப்பு கடும் அதிருப்தி!! #Gokulraj #Day5

கோகுல்ராஜ் கொலை வழக்கு: தடம் புரண்ட முக்கிய சாட்சி!; அரசுத்தரப்பு கடும் அதிருப்தி!! #Gokulraj #Day5

குற்றம், சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
  தமிழகத்தை உலுக்கிய கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில், ஒரே முக்கிய சாட்சியான கோகுல்ராஜின் தோழி ஸ்வாதி நேற்று (செப்டம்பர் 10, 2018) நீதிமன்றத்தில் பிறழ் சாட்சியம் அளித்தார். இதை சற்றும் எதிர்பாராத அரசுத்தரப்பு வழக்கறிஞர், சிபிசிஐடி போலீசார் உச்சக்கட்ட அதிருப்தி அடைந்தனர்.   சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த வெங்கடாச்சலம் - சித்ரா தம்பதியின் மகன் கோகுல்ராஜ் (23). பி.இ., பட்டதாரி. திருச்செங்கோடு கேஎஸ்ஆர் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த இவர், தனது படிப்பை 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிறைவு செய்திருந்தார். தீவிரமாக வேலை தேடி வந்த நிலையில், 23.6.2015ம் தேதியன்று வீட்டில் இருந்து கிளம்பினார். எப்போது வெளியே சென்றாலும் தாய் சித்ராவிடம் சொல்லிவிட்டுச் செல்வதோடு, அன்று மாலைக்குள் வீடு திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஆனால் அன்று இந்த நடைமுறைகள் எதையும் கோகுல்ராஜ் பின்பற்றவில்...