Wednesday, October 15மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: கழுத்தை அறுத்துக கொலை

ஆத்தூர் சிறுமி கொலையில் பதற வைக்கும் பின்னணி! ”சாமி வேஷம் கட்ட இருந்தவள  அநியாயமாக கொன்னுப்புட்டானே…!”

ஆத்தூர் சிறுமி கொலையில் பதற வைக்கும் பின்னணி! ”சாமி வேஷம் கட்ட இருந்தவள அநியாயமாக கொன்னுப்புட்டானே…!”

குற்றம், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  ஆத்தூர் அருகே பதினான்கு வயது சிறுமியை, ஆட்டை அறுப்பதுபோல் துடிக்க துடிக்க தலையை தனியாக வெட்டி வீசிய கொலைச்சம்பவம்தான், இன்றைக்கு சேலம் மாவட்ட மக்களை நெஞ்சை உறைய வைத்திருக்கிறது.   சிறுமி ராஜலட்சுமி   சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தளவாய்பட்டி தெற்கு காட்டுக்கொட்டாயைச் சேர்ந்தவர் சாமிவேல். இவருடைய மனைவி, சின்னப்பொண்ணு. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுடைய இரண்டாவது மகள், ராஜலட்சுமி (14). தளவாய்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தாள். இவர்களுடைய வீட்டில் இருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில், கார்த்திக் என்கிற தினேஷ்குமார் (25) வசித்து வருகிறார். இவருடைய மனைவி, சாரதா. முதலியார் சமூகத்தைச் சேர்ந்த தினேஷ்குமாரும், நாடார் சமூகத்தைச் சேர்ந்த சாரதாவும் 2013ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இரண்டரை வயதில் செல்வதரணிஷ் என்ற ஆண் குழந்த...