Thursday, October 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: உளவுப்பிரிவு காவல்துறை

கேரள போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் மணிவாசகம் சடலம் சேலம் கொண்டு வரப்பட்டது! தங்கை, மனைவியை பரோலில் எடுக்க தீவிரம்!

கேரள போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் மணிவாசகம் சடலம் சேலம் கொண்டு வரப்பட்டது! தங்கை, மனைவியை பரோலில் எடுக்க தீவிரம்!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
கேரளா மாநில காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த மாவோவிய போராளி மணிவாசகத்தின் சடலம், கேரளாவில் இருந்து ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் புதன்கிழமை (நவ. 13) இரவு சேலம் கொண்டு வரப்பட்டது. கேரள மாநிலம் அட்டப்பாடி அருகே மஞ்சக்கண்டி என்ற வனப்பகுதியில் கடந்த அக். 29ம் தேதி அம்மாநிலத்தின் தண்டர்போல்ட் எனப்படும் சிறப்பு அதிரடிப்படை காவல்துறைக்கும், மாவோவிய போராளிகளுக்கும் துப்பாக்கிச் சண்டை மூண்டது. அந்த மோதலில் மாவோவிய போராளிகள் ஒரு பெண் உள்பட நான்கு பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.   கொல்லப்பட்டவர்களில் முக்கியமானவராகக் கருதப்படும் மணிவாசகம் (55), சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே உள்ள ராமமூர்த்தி நகரைச் சேர்ந்தவர். அவர் கேரளா மாநிலம் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் மாவோவிய போராளிகளுக்கு ஆயுதப்பயிற்சி அளித்து வந்துள்ளார். இதுகுறித்து மத்திய உளவுத்து...