Friday, January 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: நிலத்தகராறு

சேலம் போலீசின் காட்டு அடியில் முதியவருக்கு எலும்பு முறிவு; மகனுக்கு பார்வை நரம்பு பாதிப்பு! காக்கிகளின் தொடரும் அராஜகம்!!

சேலம் போலீசின் காட்டு அடியில் முதியவருக்கு எலும்பு முறிவு; மகனுக்கு பார்வை நரம்பு பாதிப்பு! காக்கிகளின் தொடரும் அராஜகம்!!

குற்றம், சேலம், முக்கிய செய்திகள்
சேலத்தில், விசாரணை என்ற பெயரில் வரவழைத்து 83 வயது முதியவர் என்றும் பாராமல் லட்டியால் மிருகத்தனமாக தாக்கியதில் முதியவருக்கு கை எலும்பு முறிந்தது. அவருடைய மகனுக்கு கண் பார்வை நரம்புகள் பாதிக்கப்பட்டு உள்ளன.   சேலம் மாவட்டம் உத்தமசோழபுரம் அருகே உள்ள அரியாம்பாளையத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி (83). இவருடைய மகன் ராஜூ (53). இவர்களுக்கு அதே பகுதியில் 2.60 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த விவசாய நிலம், 60 ஆண்டுகளுக்கும் மேலாக கந்தசாமி குடும்பத்தினரின் அனுபவ பாத்தியதையில் இருந்து வருகிறது. இவர்களது நிலம் அருகே, உத்தமசோழபுரம் ஊராட்சி மன்றத் தலைவரான அதிமுகவைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் விவசாய நிலம் இருக்கிறது. இவர்கள் இருவரின் நிலத்திற்கு இடையே கஞ்சமலை அடிவாரத்தில் இருந்து தொடங்கி ஆத்துக்காடு பகுதி வரை நீண்டு செல்லும் ஓடை ஒன்று உள்ளது. ஆளுங்கட்சியைச் சேர்ந்த பெருமாள், க...