Monday, April 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: ஊழியர்கள் இடமாறுதல்

ஊழல் கதவுகளை திறக்கும் பெரியார் பல்கலை.!; ஊழியர்கள் இடமாறுதலிலும் ஓரவஞ்சனை!! #PeriyarUniversity #Scam

ஊழல் கதவுகளை திறக்கும் பெரியார் பல்கலை.!; ஊழியர்கள் இடமாறுதலிலும் ஓரவஞ்சனை!! #PeriyarUniversity #Scam

கல்வி, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  பெரியார் பல்கலையில் நேற்று நடந்த ஜம்போ இடமாறுதல் உத்தரவின் பின்னணியிலும் குறிப்பிட்ட சங்கத்தினரை ஒடுக்கும் நோக்கில் உத்தரவிடப்பட்டு உள்ளதோடு, முக்கிய கோப்புகள் மாயமான விவகாரத்தை அடியோடு முடக்கிப்போடும் உள்நோக்கம் இருப்பதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டுகள் கிளம்பியுள்ளன. சேலம் பெரியார் பல்கலையில் நிர்வாக பணிகளை மேற்கொள்ள அமைச்சுப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 376 ஊழியர்கள் தொகுப்பூதியம் / தினக்கூலி அடிப்படையில் பணிபுரிகின்றனர். இவர்கள் தவிர 62 நிரந்தர பணியாளர்களும் உள்ளனர்.   நிர்வாகம் தொய்வடையாமல் இருக்க முதுகெலும்பு போன்றவர்கள்தான் இத்தகைய அமைச்சுப்பணியாளர்கள். ஆனால் அரசு விதிகள் அல்லது பல்கலை விதிகளின்படி ஓர் ஊழியர், ஒரே பிரிவில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றக்கூடாது. நீண்ட காலமாக ஒருவர் ஒரே பிரிவில் பணியாற்றும்போது அங்கே முறைகேடுகள் அரங்கேற வாய...