Tuesday, December 3மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

பிரதமரை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி: நீட் விவகாரமா? உள்கட்சி பிரச்னையா?

டெல்லி : துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பதவியேற்பு விழாவில் பங்கேற்க சென்ற முதல்வர் பழனிச்சாமி பிரதமர் நரேந்திர மோடியை இன்று (11/08/17) சந்தித்தார்.

அதிமுகவில் தினகரன் நியமனம் செல்லாது என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டு அரசியலில் பரபரப்பை கிளப்பினார் முதல்வர் பழனிச்சாமி. முதல்வரின் இந்த அறிவிப்பால் தினகரன் அணி கடும் கொதிப்படைந்து உள்ளது. முதல்வரின் அறிவிப்புக்கு, மதுரை மேலூர் பொதுக்கூட்டத்தில் பதிலடி கொடுப்போம் என்று தினகரன் அணியினர் பேசி வருகின்றனர்.

இந்நிலையில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பதவியேற்பு விழாவில் பங்கேற்க முதல்வர் பழனிச்சாமி நேற்று டெல்லி சென்றார். இன்று காலையில் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற பழனிச்சாமி பின்னர் நாடாளுமனற் வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரையும் உடனிருந்தார்.
இச்சந்திப்பின் நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Leave a Reply