Wednesday, May 8மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: professor Krishnakumar

சேலம் பெரியார் பல்கலை பேராசிரியர் திடீர் பணியிடைநீக்கம்! 8 நாளில் ஓய்வு பெற இருந்தார்!!

சேலம் பெரியார் பல்கலை பேராசிரியர் திடீர் பணியிடைநீக்கம்! 8 நாளில் ஓய்வு பெற இருந்தார்!!

குற்றம், சேலம், முக்கிய செய்திகள்
சேலம் பெரியார் பல்கலை டீன் கிருஷ்ணகுமார், இன்னும் 8 நாளில் ஓய்வு பெற இருந்த நிலையில், ஊழல் புகாரின்பேரில் திடீரென்று பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். சேலம் பெரியார் பல்கலையில் இயற்பியல் துறைத்தலைவராகவும், பல்கலை டீன் ஆகவும் பணியாற்றி வந்தவர் கிருஷ்ணகுமார். இவர், கடந்த 2010ம் ஆண்டு சிறிது காலம் பெரியார் பல்கலை துணைவேந்தராகவும் பொறுப்பு வகித்தார். அதன்பிறகு, புதிய துணைவேந்தராக முத்துச்செழியன் நியமிக்கப்பட்டார். பேராசிரியர் கிருஷ்ணகுமார், துணைவேந்தர் பொறுப்பில் இருந்தபோது, பல்கலை விருந்தினர் மாளிகையை புதுப்பிப்பதற்காக குளிர்சாதன உபகரணங்கள், அறைகலன்கள் கொள்முதல் செய்ததில் பல லட்சம் ரூபாய் முறைகேடு செய்ததாக அவர் மீது புகார்கள் எழுந்தன.   மேலும், எழுதுபொருள்கள் கொள்முதல் செய்ததிலும் இல்லாத நிறுவனங்களின் பெயரில் போலியாக ரசீதுகளை தயாரித்து மோசடியில
பெரியார் பல்கலையில் என்னதான் நடக்கிறது? இன்றாவது மனம் திறப்பாரா பதிவாளர்?

பெரியார் பல்கலையில் என்னதான் நடக்கிறது? இன்றாவது மனம் திறப்பாரா பதிவாளர்?

கல்வி, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  சேலம் பெரியார் பல்கலையில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகவே சுற்றிச்சுழன்றடித்து வரும் ஊழல் புகார்கள் குறித்து பணி நிறைவு பெறும் நாளான இன்றாவது (ஆகஸ்ட் 17, 2018) பதிவாளர் மணிவண்ணன் மனம் திறப்பாரா? என்ற எதிர்பார்ப்பு பல்கலை வட்டாரத்தில் ஏகத்துக்கும் பரவிக்கிடக்கிறது. சேலம் பெரியார் பல்கலையில் பதிவாளராக பணியாற்றி வருபவர் பேராசிரியர் மணிவண்ணன். இவருடைய தாய்ப்பல்கலையான தமிழ்நாடு திறந்தவெளி பல்கலையில் இணை பேராசிரியராகவும், பின்னர் தமிழ்நாடு கல்வியியல் பல்கலையில் தேர்வாணையராகவும் பணியாற்றிய அனுபவம் பெற்ற மணிவண்ணன், கடந்த 18.8.2015ம் தேதி பெரியார் பல்கலையில் பதிவாளராக பணியில் சேர்ந்தார்.   மூன்றாண்டு காலம் 'டென்யூர்' முடிந்து இன்றுடன் அவர் பணி நிறைவு பெறுகிறார். பதிவாளர் பதவி என்பது, துணை வேந்தருக்கு அடுத்த நிலையில் நிர்வாக ரீதியில் அதிகாரமிக்கது ஆகும். ஆசிரியர் மற்றும் ஆச