Monday, September 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Kongu region

தேங்காய் சுட்டு தலையாடிக்கு வரவேற்பு! இது கொங்கு மண்டல ஸ்பெஷல்!

தேங்காய் சுட்டு தலையாடிக்கு வரவேற்பு! இது கொங்கு மண்டல ஸ்பெஷல்!

கலாச்சாரம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஆடி மாதப் பிறப்பை, கொங்கு மண்டல மக்கள் வீடுகள்தோறும் தேங்காய் சுடும் பண்டிகை மூலம் உற்சாகமாக வரவேற்றுக் கொண்டாடினர்.   ஆடி மற்றும் மார்கழி மாதங்களில் திருமணம், புதுமனை புகுதல், புதிய வணிகம் உள்ளிட்ட புதிய தொடக்கங்களை சாதி இந்துக்கள் மேற்கொள்வதில்லை. புதுமணத் தம்பதிகளுக்கு ஆகாத மாதமாகவும் ஆடி மாதம் உள்ளது.   இப்படி ஆடியைப் (ஆடி கார் அல்ல) பற்றி வெவ்வேறு நம்பிக்கைகள், கற்பிதங்கள் விரவிக் கிடந்தாலும், ஆடி மாதத்தில்தான் அம்மன் கோயில்களில் விழாக்கள் களைகட்டுகின்றன. வணிக நிறுவனங்கள் ஆடி தள்ளுபடி என விசேஷ சலுகைகளும் வாரி வழங்குகின்றன.   இதெல்லாம் ஒருபுறம் இருக்க, ஆடி மாதப் பிறப்பை 'தலையாடி' என்ற பெயரில் கொங்கு மண்டல மக்கள் தொன்றுதொட்டு கொண்டாடி வருகின்றனர். ஆடி மாதம் முதல் தேதியை குறிக்கும் வகையில் 'தலை ஆடி' என்கிறார்களே தவிர, தஞ்சாவூர் தலையாட்ட
மேட்டூரில் களைகட்டிய ஆடிப்பெருக்கு விழா; புதுமண தம்பதிகள் புது தாலி, புத்தாடை அணிந்து வழிபாடு!

மேட்டூரில் களைகட்டிய ஆடிப்பெருக்கு விழா; புதுமண தம்பதிகள் புது தாலி, புத்தாடை அணிந்து வழிபாடு!

சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, முக்கிய செய்திகள்
  பத்தாண்டுகளுக்குப் பிறகு மேட்டூர் அணை நிரம்பி வழிந்ததால், இந்தாண்டு ஆடிப்பெருக்கு விழாவை பக்தர்கள் உற்சாகமாக கொண்டாடி தீர்த்தனர்.   பஞ்சபூதங்களில் ஒன்றான நீருக்கு மரியாதை அளிக்கும் விதமாக ஆடிப்பெருக்கு விழாவை காவிரிக்கரையோர மக்கள் காலங்காலமாக கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தின் தென்மாவட்டங்களில் இத்தகைய வழிபாட்டு கலாச்சாரம் வழக்கத்தில் இல்லை. ஆனால் கொங்கு மண்டலத்தில் குறிப்பாக காவிரி கரையோரம் உள்ள ஈரோடு, திருச்சி, சேலம், நாமக்கல் மற்றும் ஒகேனக்கல் காவிரி ஆறு பாயக்கூடிய தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் ஆடி 18 அன்று, பக்தர்கள் நீர்நிலைகளில் கூடி வழிபடுவது நடைமுறையில் இருந்து வருகிறது.   ஆடிப்பெருக்கு நீராடலின் பின்னணியில் இன்னொரு கதையும் சொல்லப்படுகிறது. அதாவது, மஹாபாரத இதிகாசத்தில் பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் தொடர்ந்து 18 நாள்கள் போர் நடந்ததாகவும், போரில
அதிமுக: முடிவுக்கு வருகிறது மன்னார்குடி ராஜ்ஜியம்?

அதிமுக: முடிவுக்கு வருகிறது மன்னார்குடி ராஜ்ஜியம்?

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் அதிரடிகளால் அதிமுகவில் சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்ட மன்னார்குடி கும்பலின் ராஜ்ஜியம் கூண்டோடு முடிவுக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த நாளன்று தொடங்கிய 'பிரேக்கிங் நியூஸ்' ஜுரம், இன்னும் தமிழக மின்னணு ஊடகங்களை விட்டு அகலவே இல்லை. அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி பூசல்கள் குறித்த செய்திகள்தான் ஒட்டுமொத்த ஊடகங்களையும் ஆக்கிரமித்து உள்ளன. நிரந்தர முதல்வர், நிரந்தர பொதுச்செயலாளர் என உச்சாணிக் கொம்பிலேயே ஜெயலலிதாவை வைத்து அழகு பார்த்த ரத்தத்தின் ரத்தங்கள்தான், அவர் மறைந்த பின்னர் சசிகலாவை 'சின்னம்மா' என்று வாஞ்சையோடு அழைத்தனர். அதிமுகவை காக்கும் ஒரே ரட்சகர் அவர்தான் என்று, சசிகலாவை பொதுச்செயலாளர் ஆக்கியதும் இன்றைய முதல்வர், துணை முதல்வர் உள்¢ளிட்ட விசுவாசிகள்தான். 'இடத்தைக் கொடுத்தா