Friday, April 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: bipolar politics

ஜெயலலிதா மரணம்: சொன்னீர்களே! செய்வீர்களா?

ஜெயலலிதா மரணம்: சொன்னீர்களே! செய்வீர்களா?

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஓபிஎஸ் - இபிஎஸ் அணிகள் இணைப்பு முடிந்து ஒரு மாதம் ஆக உள்ள நிலையில், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஆணையம் அமைக்கப்படும் என்ற முதல்வரின் பேச்சு செயல்வடிவம் பெறுமா? என்பதில் தொண்டர்களுக்கு பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி உடல்நலக்குறைவால் இறந்தார். அதன்பிறகு, ஒன்றரை கோடி தொண்டர்கள் பலமிக்க அதிமுகவை கைப்பற்ற 'சசிகலா அன்டு கோ' கடும் முஸ்தீபுகளில் இறங்கியது. ஜெயலலிதா சிறைக்கு சென்றபோதெல்லாம் தற்காலிக முதல்வராக ருசி கண்டிருந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு, அந்த அரியணையை நிரந்தரமாக்கிக் கொள்ள உள்ளூர ஆசை இருந்து கொண்டே இருந்தது. இதை மோப்பம் பிடித்துவிட்ட மன்னார்குடி தரப்பு, அவர் வாயாலேயே சசிகலாவை முதல்வர் பதவியேற்க அழைக்கும்படி ஆளுநரிடம் சொல்ல வைத்தது. ஆனால், ஆசை யாரை விட்டு வைத்தது?. சசிகலா உள்ளிட்ட மன்னார்குடி கும்பலுடன் மோத முட