Friday, April 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Asia Pacific

வெளிநாடுகளில் கருப்பு பணம் பதுக்கியுள்ள இந்தியர்கள் யார் யார்?

வெளிநாடுகளில் கருப்பு பணம் பதுக்கியுள்ள இந்தியர்கள் யார் யார்?

அரசியல், இந்தியா, உலகம், சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
வெளிநாடுகளில் பல்லாயிரம் கோடிக்கணக்கில் சொத்துகளை பதுக்கி வைத்துள்ள இந்தியர்கள் யார் யார் என்பது குறித்த விவரங்கள் 'பாரடைஸ் ஆவண கசிவு' மூலம் வெளியாகியுள்ளது. இது, இந்திய அரசியலில் பெரும் புயலைக் கிளப்பி உள்ளது. வளரும் நாடுகளில் இருந்து வெளிநாடுகளுக்கு சட்ட விரோதமாக கருப்பு பணம் பதுக்குவது ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக, கடந்த 2002ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை இந்தியாவில் இருந்து மட்டும் 343.04 பில்லியன் டாலர் மதிப்பிலான கருப்புப் பணம் அயல் நாடுகளில் பதுக்கப்பட்டு உள்ளதாக ஓர் ஆய்வு கூறுகிறது. இதன்மூலம் கருப்புப் பணம் பதுக்கலில் உலகளவில் இந்தியாவுக்கு 5வது கிடைத்துள்ளது. அதேநேரம், 2011ம் ஆண்டில் மட்டும் 84.93 பில்லியன் டாலர் கருப்புப் பணம் வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. அந்த ஆண்டில் இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு இந்தியாவுக்கு 3
இந்தியாவுக்கு ராணுவ ஆட்சிதான் வேண்டுமாம்!: சர்வே சொல்லுது

இந்தியாவுக்கு ராணுவ ஆட்சிதான் வேண்டுமாம்!: சர்வே சொல்லுது

அரசியல், இந்தியா, உலகம், முக்கிய செய்திகள்
இந்தியாவில் ஜனநாயக ஆட்சி மீது திருப்தி இருந்தாலும், ராணுவ ஆட்சி வந்தால்தான் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று அதிர்ச்சிகரமான எண்ணங்களை இந்தியர்கள் வெளியிட்டுள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்த 'பியூ ரிசர்ச்', 38 நாடுகளில் 41955 பேரிடம் ஓர் ஆய்வை நடத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி 16ம் தேதி முதல் மே 8ம் தேதி வரை இந்த ஆய்வை நடத்தி முடித்திருக்கிறது. இதில், இந்தியர்களின் மனவோட்டம் பற்றிய சில அதிர்ச்சிகரமான, அதேநேரம் ஆச்சர்யகரமான தகவல்கள் கிடைத்துள்ளன. இந்தியாவில், கடந்த 2012ம் ஆண்டு முதல் தற்போது வரை சராசரியாக 6.9 சதவீதம் பொருளாதார வளர்ச்சி இருந்து வருவதாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவிலுள்ள 5ல் நான்கு பேர், அரசு மீது நம்பிக்கை வைத்துள்ளதாகவும், இருப்பினும் ராணுவ ஆட்சி வந்தால் நல்லது என்றும் பெரும்பான்மையோர் கருதுவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, ஆதார்