Friday, April 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Amitabh Bachchan

தேர்தலில் தனித்து போட்டி; ரஜினி அதிரடி அரசியல் பிரவேசம்!

தேர்தலில் தனித்து போட்டி; ரஜினி அதிரடி அரசியல் பிரவேசம்!

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த சர்ச்சை இன்று முடிவுக்கு வந்தது. அரசியலுக்கு வருவது உறுதி என்றும், சட்டப்பேரவை தேர்தலில் 234 தொ குதிகளிலும் தனித்து போட்டியிடுவேன் என்றும் ரஜினிகாந்த் இன்று (டிசம்பர் 31, 2017) அதிரடியாக அறிவித்தார். நடிகர் ரஜினிகாந்த் கடந்த ஆறு நாள்களாக ரசிகர்களை நேரில் சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தனது அரசியல் நிலைப்பாடு குறித்த அறிவிப்பை இன்று அறிவிப்பதாக அவர் ஏற்கனவே சொல்லி இருந்தார். அதன்படி, ரசிகர்கள் சந்திப்பின் கடைசி நாளான இன்று காலை அவர் ராகவேந்திரா கல்யாண மண்டபத்திற்கு வந்தார். அப்போது ரஜினிகாந்த், தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் அது காலத்தின் கட்டாயம் என்றும் கூறினார். அவர் அவ்வாறு கூறியதும், ரசிகர்கள் அரங்கம் அதிர பலத்த கரவொலி எழுப்ப
வெளிநாடுகளில் கருப்பு பணம் பதுக்கியுள்ள இந்தியர்கள் யார் யார்?

வெளிநாடுகளில் கருப்பு பணம் பதுக்கியுள்ள இந்தியர்கள் யார் யார்?

அரசியல், இந்தியா, உலகம், சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
வெளிநாடுகளில் பல்லாயிரம் கோடிக்கணக்கில் சொத்துகளை பதுக்கி வைத்துள்ள இந்தியர்கள் யார் யார் என்பது குறித்த விவரங்கள் 'பாரடைஸ் ஆவண கசிவு' மூலம் வெளியாகியுள்ளது. இது, இந்திய அரசியலில் பெரும் புயலைக் கிளப்பி உள்ளது. வளரும் நாடுகளில் இருந்து வெளிநாடுகளுக்கு சட்ட விரோதமாக கருப்பு பணம் பதுக்குவது ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக, கடந்த 2002ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை இந்தியாவில் இருந்து மட்டும் 343.04 பில்லியன் டாலர் மதிப்பிலான கருப்புப் பணம் அயல் நாடுகளில் பதுக்கப்பட்டு உள்ளதாக ஓர் ஆய்வு கூறுகிறது. இதன்மூலம் கருப்புப் பணம் பதுக்கலில் உலகளவில் இந்தியாவுக்கு 5வது கிடைத்துள்ளது. அதேநேரம், 2011ம் ஆண்டில் மட்டும் 84.93 பில்லியன் டாலர் கருப்புப் பணம் வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. அந்த ஆண்டில் இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு இந்தியாவுக்கு 3