Tuesday, October 14மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: tourism minister

மாப்பிள்ளை அவருதான்… ஆனா அவர் போட்டிருக்கிற டிரஸ் என்னுது! இது நாமக்கல் திமுக பாலிடிக்ஸ்!

மாப்பிள்ளை அவருதான்… ஆனா அவர் போட்டிருக்கிற டிரஸ் என்னுது! இது நாமக்கல் திமுக பாலிடிக்ஸ்!

அரசியல், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
சுற்றுலாத்துறை அமைச்சராக மதிவேந்தன் செயல்பட்டு வந்தாலும், நாமக்கல் மாவட்டத்தைப் பொருத்தவரை சகலமும் நான்தான் என காலரை தூக்கிவிட்டு பவர் பாலிடிக்ஸ் நடத்தி வருகிறார் மாவட்ட பொறுப்பாளரான கேஆர்என். ராஜேஷ்குமார்.   நாமக்கல்லைச் சேர்ந்தவர் மருத்துவர் மாயவன். திமுகவின் மூத்த நிர்வாகிகளுள் ஒருவர். இவருடைய மகன் மதிவேந்தன் (36). நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக இருக்கிறார். எம்பிபிஎஸ்., எம்.டி., படித்துள்ள மதிவேந்தன், 2021 சட்டமன்ற தேர்தலில் ராசிபுரம் தனித்தொகுதியில் முன்னாள் அமைச்சர் சரோஜாவை எதிர்த்துப் போட்டியிட்டு 2000க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றார்.   யாருமே எதிர்பாராத வகையில் மதிவேந்தனை சுற்றுலாத்துறை அமைச்சராக்கி அழகு பார்த்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழக அமைச்சரவையில் இவர்தான் மிகவும் ஜூனியர். அருந்த...