தேர்தல் 2026: சேலத்தில் கோட்டையைப் பிடிக்குமா திமுக?
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 30ம் தேதி தொடங்குகிறது. தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டை வெற்றிகரமாக முடித்து, முதல்கட்டமாக 23 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டிருக்கிறார் அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி. இன்னும் ஓரிரு நாளில் திமுக கூட்டணியும், முழு வேட்பாளர் பட்டியலை வெளியிட உள்ளது.
திமுக, அதிமுக, நாதக, தவெக என வெளிப்பார்வைக்கு நான்கு முனைப் போட்டியெனக் கூறப்பட்டாலும், உண்மையில் திமுக, அதிமுக இடையேதான் நேரடிப் போட்டி நிலவுகிறது.
ஆளுங்கட்சி அந்தஸ்து, அபரிமிதமான பணபலம், வலுவான கூட்டணி உள்ளிட்ட காரணிகளால் ஒட்டுமொத்த அளவில் திமுகவுக்கு சற்று சாதகமான சூழல் உள்ளது.
அதேநேரம், கொங்கு மண்டலத்தில் இந்த முறையும் ஆளும் திமுகவுக்கு இலைக்கட்சி சிம்மசொப்பனமாக இருக்கும் என்றே கள நிலவரம் கூறுகிறது. குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 11 தொகுதிகள...
