அமைச்சர் ராஜேந்திரன்: தரை தட்டும் கப்பலா? கரையேறும் மாலுமியா?
ராஜேந்திரன், அமைச்சர்
சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரனின் பிரித்தாளும் அரசியல் தந்திரம், வரும் சட்டமன்ற தேர்தலில் அவரையே பூமராங் ஆக திருப்பித் தாக்கும் என்கிறார்கள் திமுகவின் மூத்த உடன்பிறப்புகள்.
சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர், வழக்கறிஞர் ராஜேந்திரன் (66). குரு நானக் கல்லூரியில் இளங்கலை மாணவராக படித்துக் கொண்டிருந்தபோது நடந்த மாணவர் அமைப்புத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, கலைஞரின் கவனத்தை ஈர்த்தார். காரணம், அந்த நேரத்தில் வேறு எந்தக் கல்லூரியிலும் திமுகவின் மாணவர் அமைப்பு வெற்றி பெறவில்லை. மாணவர் அணி அமைப்பாளர், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர், இளைஞரணி மாநில துணை செயலாளர் என்று படிப்படியாக உயர்ந்த ராஜேந்திரன், திமுகவின் தனிப்பெரும் அமைப்பான தொமுசவின் மாநிலத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.
மறைந்த வீரபாண்டியார், ஆக்டிவ் பாலிடிக்ஸில் இருந்தபோது, அவருக்கு எதிராக மு.க.ஸ்டாலினால் வளர...
