வடிவேலு அவதாரம் எடுக்கும் தமிழக அமைச்சர்கள்; ”பாவம் அவங்களே கன்ஃபியூஸ் ஆயிட்டாங்க!”
சினிமாவில் வரும் காமெடி காட்சிகளை விட நம்ம ஊர் அமைச்சர்கள், அரசியல்வாதிகளின் மேடைப்பேச்சும், அசட்டுத்தனமான நடவடிக்கைகளும் நம்மை நகைச்சுவையால் திணறடிக்கின்றன என்றால் மிகையாகாது.
நடிகர் விஜய் நடித்த 'காவலன்' படத்தில் 'வைகைப்புயல்' வடிவேலு, ஏதாவது குண்டக்க மண்டக்க சொல்லிவிட்டு 'பாவம் அவரே கன்ஃபியூஸ் ஆயிட்டாரு' என அப்பாவியாகக் கூறுவார். அதேபோல்தான் அமைந்திருக்கிறது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சும்.
ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ''தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்கடங்காமல் உள்ளது. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லிக்குச் சென்று பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து கொசுக்கள் கட்டுக்கடங்காமல் உள்ளது. அதை கட்டுப்படுத்த எய்ம்ஸ் போன்ற சிறப்பு மருத்துவர்களை அனுப்பி வையுங்கள்'' என்று சொன்னதாகக் கூறினார்.
https://twitter.com/twi...