Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Forest department

சேலம்: சூரியூர் கிராமம் எங்கே? 28 ஆண்டாக தொடரும் சர்ச்சை!

சேலம்: சூரியூர் கிராமம் எங்கே? 28 ஆண்டாக தொடரும் சர்ச்சை!

சிறப்பு கட்டுரைகள், சேலம், முக்கிய செய்திகள்
சேலம் அருகே, இரண்டு மலைகளுக்கு இடையே பள்ளத்தாக்கு பகுதியில் இருந்த சூரியூர் பள்ளக்காடு கிராமம் வருவாய்த்துறை ஆவணங்களில் இருந்து திடீரென்று தொலைந்து போனதாக சொல்லப்பட, 28 ஆண்டுகளுக்கும் மேலாக கிராமத்தைத் தேடும் பணிகளில் வனக்கிராம மக்கள் சட்டப் போராட்டம் நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி வட்டாரத்திற்கு உட்பட்டது சூரியூர் பள்ளக்காடு எனும் வனக்கிராமம். ஜல்லுத்துமலை, ஜருகுமலை ஆகிய இரு மலைகளுக்கு இடையே பள்ளத்தாக்கில் இந்த ஊர் அமைந்துள்ளது. இந்த வனக்கிராமத்தில் 77 குடும்பத்தினர் பல ஆண்டுகளாக வசித்து வருவதுடன், மலையடிவாரத்தில் மலர், மஞ்சள், வெங்காயம் உள்ளிட்ட பயிர்களும் பயிரிட்டு வருகின்றனர். இந்நிலையில், சேர்வராயன் தெற்கு வனச்சரகத்திற்கு உட்பட்ட, காப்புக்காடாக அறிவிக்கப்பட்ட பகுதியில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், வனப்பகுதியை விட்டு உடனடியாக வெளியேற
வடிவேலு அவதாரம் எடுக்கும் தமிழக அமைச்சர்கள்; ”பாவம் அவங்களே  கன்ஃபியூஸ் ஆயிட்டாங்க!”

வடிவேலு அவதாரம் எடுக்கும் தமிழக அமைச்சர்கள்; ”பாவம் அவங்களே கன்ஃபியூஸ் ஆயிட்டாங்க!”

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சினிமாவில் வரும் காமெடி காட்சிகளை விட நம்ம ஊர் அமைச்சர்கள், அரசியல்வாதிகளின் மேடைப்பேச்சும், அசட்டுத்தனமான நடவடிக்கைகளும் நம்மை நகைச்சுவையால் திணறடிக்கின்றன என்றால் மிகையாகாது. நடிகர் விஜய் நடித்த 'காவலன்' படத்தில் 'வைகைப்புயல்' வடிவேலு, ஏதாவது குண்டக்க மண்டக்க சொல்லிவிட்டு 'பாவம் அவரே கன்ஃபியூஸ் ஆயிட்டாரு' என அப்பாவியாகக் கூறுவார். அதேபோல்தான் அமைந்திருக்கிறது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சும். ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ''தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்கடங்காமல் உள்ளது. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லிக்குச் சென்று பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து கொசுக்கள் கட்டுக்கடங்காமல் உள்ளது. அதை கட்டுப்படுத்த எய்ம்ஸ் போன்ற சிறப்பு மருத்துவர்களை அனுப்பி வையுங்கள்'' என்று சொன்னதாகக் கூறினார். https://twitter.com/twi