பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே – திரை இசையில் வள்ளுவம் #தொடர்
திரை இசைப்பாடல்களில்
பொதிந்திருக்கும் குறள்
இன்பத்தை வெளிக்கொணர்வதே
இத்தொடரின் நோக்கம்.
இந்த பகுதியில் பெரும்பாலும்
காதல் பாடல்களே இடம்
பெற்று வந்தன.
இந்த முறை அதில்
சிறு மாற்றம்.
இரண்டு முக்கியக்
காரணங்கள் இருக்கின்றன.
கோடை விடுமுறைக்குப்
பின்னர் பள்ளிகள்
திறக்கப்பட்டுள்ள நேரம் இது.
மாணவர்களுக்கு இந்தத்
தொடரின் மூலம் சில
செய்திகளைச் சொல்லலாம்.
இரண்டாவது காரணம்,
ஜூன் 24ம் தேதி இளங்கம்பன்
கண்ணதாசன் பிறந்த தினம்.
நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன்.
''பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை'' என்ற பொய்யாமொழியன், செல்வத்தை ஒருபோதும் உடைமையாகச் சொன்னதில்லை. அது வரும்; போகும். நிலையற்றது. அவன், ஊக்கம் உடைமையைத்தான் உண்மையான உடைமை என்கிறான். அதனால்தானோ என்னவோ அய்யன் வள்ளுவன், ஊக்கமுடைமையை பொருட்பாலில் வைத்துப் பாடியிருக்கிறான். ஒருவனுடைய ஊக்கம் எப்படி இருக...