Wednesday, October 15மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: DMK coalition

மக்களவையில் ‘வாஷ் அவுட்’; உள்ளாட்சி தேர்தலில் ‘நாட் அவுட்’ எடப்பாடி! சறுக்கிய திமுக!!

மக்களவையில் ‘வாஷ் அவுட்’; உள்ளாட்சி தேர்தலில் ‘நாட் அவுட்’ எடப்பாடி! சறுக்கிய திமுக!!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
கடந்த மக்களவை தேர்தலின்போது சொந்த மண்ணில் பதினோரு சட்டமன்றத் தொகுதிகளிலும் மண்ணைக் கவ்விய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அண்மைய உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சிக்குழுக்களை ஒட்டுமொத்தமாக வாரி சுருட்டினார். தமிழக அளவில் அதிக இடங்களில் திமுக முன்னிலை பெற்றிருந்தாலும், சேலம் மாவட்டத்தில் அக்கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது.   தமிழகத்தில் சென்னை மற்றும் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து, எஞ்சிய 27 மாவட்டங்களில் ஊரக பகுதிகளுக்கு மட்டும் உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. முதல்கட்டமாக கடந்த டிசம்பர் 27ம் தேதியும், இரண்டாம் கட்டமாக டிசம்பர் 30ம் தேதியும் தேர்தல் நடந்தது. சேலம் மாவட்டத்தில் பதிவான வாக்குகள் ஜன. 2ம் தேதி எண்ணப்பட்டன. நள்ளிரவைக் கடந்தும் தொடர்ந்த வாக்கு எண்ணிக்கை ஜன. 3ம் தேதி பகல் 11 மணியளவில் நிறைவடைந்...