
சட்டப்பேரவை: மு.க.ஸ்டாலின் வெளிநடப்பும் டிடிவி தினகரன் வருகையும்!
சட்டப்பேரவையில் இருந்து அடிக்கடி வெளிநடப்பு செய்யும் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை கிண்டலடித்தும், முதன்முதலில் எம்எல்ஏவாக பேரவைக்குள் காலடி வைத்த டிடிவி தினகரனை பாராட்டியும் ட்விட்டரில் பலர் 'மீம்'கள் பதிவிட்டுள்ளனர்.
நடப்பு ஆண்டில் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று (ஜனவரி 8, 2017) தொடங்கியது. கடந்த அக்டோபர் மாதம் தமிழக ஆளுநராக பொறுப்பேற்றார் பன்வாரிலால் புரோஹித். அவர் உரையாற்றும் முதல் கூட்டத்தொடர் இது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஆர்.கே.நகர் தொகுதி முதன்முதலில் இடைத்தேர்தலைச் சந்தித்தது. அதில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கி வெற்றி பெற்ற டிடிவி தினகரன், எம்எல்ஏ ஆக காலடி வைக்கும் முதல் கூட்டத்தொடர்.
மக்களவை, மாநிலங்களவை எம்பியாக இருந்த டிடிவி தினகரன் கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் இடைவெளிக்குப்பிறகு, மக்கள் பிரதிநிதியாக அவர் இப்போது சட்டப்பேரவைக்குள் நுழைந்துள்ளார்.
...