Tuesday, April 23மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: வேல்முருகன்

திண்ணை: பகுத்தறிவு பல்கலை பதிவாளர் பதவிக்கு ஏலம்; அமைச்சர் கறார்!

திண்ணை: பகுத்தறிவு பல்கலை பதிவாளர் பதவிக்கு ஏலம்; அமைச்சர் கறார்!

அரசியல், கடலூர், சேலம், தமிழ்நாடு, திண்ணை, முக்கிய செய்திகள்
''முன்னாடிலாம் வீட்டு வீட்டுக்கு திண்ணைய கட்டி வெச்சிருப்பாங்க. பாதசாரிங்க யாராவது உட்கார்ந்து இளைப்பாறிட்டு போறதுக்கு வசதியா இருக்கும். இப்போலாம் வீடுங்கதான் பெருசு பெருசா இருக்கே தவிர திண்ணையதான் காணோம். தமிழனுங்க மனசும் சின்னதாப் போச்சுது'' என்றபடியே, சலிப்புடன் நக்கல் நல்லசாமியின் வீட்டு திண்ணையில் வந்தமர்ந்தார் நம்ம பேனாக்காரர்.   ''எங்கே நம்ம ஞானவெட்டியாரையும், பொய்யாமொழியாரையும் நாலஞ்சு நாளா ஆளையே காணோமே?'' என்றார் நக்கல் நல்லசாமி. ''ஓ...அவங்களா... ஏதோ வேலையா பண்ருட்டி பக்கம் போயிருக்கறதா சொன்னாங்க''   ''இப்போது ஏதும் பலாப்பழம் சீசன் இல்லையே?'' ''யோவ்... இந்த நக்கலுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல... என்ற பேனாக்காரர், அவங்க எதுக்கு பண்ருட்டிக்கு போனாங்கனு நமக்கு தெரியலப்பா. ஆனா, அங்க இருந்தபடியே நமக்கு செல்போன்ல ஒரு சேதி சொல்லியிருக்காங்
நீட் தேர்வில் மாபெரும் ஊழல்!: வேல்முருகன் பகீர் குற்றச்சாட்டு

நீட் தேர்வில் மாபெரும் ஊழல்!: வேல்முருகன் பகீர் குற்றச்சாட்டு

அரசியல், இந்தியா, கல்வி, சேலம், முக்கிய செய்திகள்
ராஜஸ்தானில் செயல்படும் தனியார் கோச்சிங் செண்டர்களும், சிபிஎஸ்இ நிர்வாகமும் சேர்ந்து கொண்டு நீட் தேர்வில் மாபெரும் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் பகீர் புகார் கூறியுள்ளார். தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் இன்று (மே 6, 2018) நடந்தது. முன்னதாக, அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியது: மனித உரிமை மீறல்: நீட் தேர்வில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராடி வருகிறது. தேர்வு எழுதும் மாணவிகளின் பொட்டை அழித்து, வளையல்களை உடைத்து, பூவை பறிக்கும் கொடூர செயல்களில் சிபிஎஸ்இ நிர்வாகமும், மத்திய அரசும் ஈடுபட்டு வருகிறது. சில இடங்களில் மாணவிகளின் உள்ளாடைகளைக்கூட கழற்றி சோதனையிட்டுள்ளனர். இது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். இதுகுறித்து தே