Tuesday, September 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: சபரிமலை அய்யப்பன்

”நான்தான் ஜெயலலிதாவின் கதாசிரியர்!”; மறக்கப்பட்ட படைப்பாளியின் கதை! #Jayalalitha #Rajinikant

”நான்தான் ஜெயலலிதாவின் கதாசிரியர்!”; மறக்கப்பட்ட படைப்பாளியின் கதை! #Jayalalitha #Rajinikant

இலக்கியம், சினிமா, சிறப்பு கட்டுரைகள், சேலம், தஞ்சாவூர், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை 'ரன் மெஷின்' என்றால், 83 வயதிலும் ஓயாமல் எழுதி வரும், மூத்த படைப்பாளர் மகரிஷியை, 'எழுத்து இயந்திரம்' என்றே சொல்லலாம்.   இதுவரை, 130 நாவல்கள், 5 சிறுகதை தொகுப்புகள், 60க்கும் மேற்பட்ட கட்டுரைகள் என 22 ஆயிரம் பக்கங்களுக்குமேல் எழுதிக்குவித்துள்ளார். இன்றும் அவரது பேனா மையின் ஈரம் காயவே இல்லை. இவர் எழுதிய பல நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டு உள்ளன. 'சூப்பர் ஸ்டார்' ரஜினிக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய, 'புவனா ஒரு கேள்விக்குறி' (1977) படத்தின் கதை மகரிஷியுடையது.   தவிர, 'பனிமலை' என்ற நாவல், 'என்னதான் முடிவு?' (1965) படமாக ஆக்கம் பெற்றது. 'பத்ரகாளி' (1976), 'சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு' (1977), 'வட்டத்துக்குள் சதுரம்' (1978), 'நதியை தேடிவந்த கடல்' (1980) ஆகிய திரைப்படங்களும் மகரிஷியின் நாவல்களை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்பட்டன. &...