பூவனம்: நீரில் ஆடும் நிலா (கவிதை)
நீரில் ஆடும் நிலா...!
திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த கவிஞர் பெ.அறிவுடைநம்பி எழுதி இருக்கிறார். தமிழக அரசின் கதர் வாரியத்தில் பணியாற்றி, ஓய்வுபெற்றவர். பல்வேறு சிற்றிதழ்களிலும் இவருடைய படைப்புகள் வெளியாகி உள்ளன.
கவிஞர் மு.மேத்தாவின் முன்னுரையுடன், திண்டுக்கல் அய்யனார் பதிப்பகம் நூலை வெளியிட்டு உள்ளது. நூலில் இருந்து...
கீழே விழுவது புவி ஈர்ப்பு
மேலே எழுவது விலைவாசி
அது நியூட்டன் விதி
இது அரசியல் சதி
என நையாண்டி செய்கிறார்.
ஒவ்வொருமுறை அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயரும்போதும் நாட்டில் விலைவாசியும் உயர்ந்து விடுகிறது என்பதை அனுபவ ரீதியாக அறிந்தவர்தானே நம் கவிஞர்.
மற்றொரு இடத்தில்,
தீச்சட்டி எடுப்போம்
பேருந்தையும் உடைப்போம்
இது நேர்த்திக்கடன்!
என்று சமீபத்திய தமிழக அரசியல் நிகழ்வுகளை பகடி செய்கிறார்.
இதைவிட கவிஞரின் இன்னொரு நுட்பமான பதிவு, ந...