Saturday, January 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: பாமக

பல்கலை மாணவி பலாத்காரம்: அனைவரும் வெட்கப்பட வேண்டும்!; உயர்நீதிமன்றம் ‘நறுக்’

பல்கலை மாணவி பலாத்காரம்: அனைவரும் வெட்கப்பட வேண்டும்!; உயர்நீதிமன்றம் ‘நறுக்’

சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
அரசியல் விளம்பரத்திற்காக செய்யப்படும் போராட்டங்களுக்கு அனுமதி வழங்க உத்தரவிட முடியாது எனக்கூறி, பாமக வழக்கறிஞர் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை (ஜன. 2, 2025) உத்தரவிட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலை.யில்பி.இ., படித்து வரும் மாணவி ஒருவர்,அண்மையில் பாலியல்பலாத்காரம் செய்யப்பட்டார்.பல்கலை வளாகத்தில்ஒதுக்குப்புறமான இடத்தில்இரவு நடந்த இந்தகொடூர சம்பவம், நாடுமுழுவதும் பரபரப்பைஏற்படுத்தி உள்ளது. மாணவியை நாசப்படுத்தியதாகசென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்தஞானசேகரன் என்ற இளைஞரைகாவல்துறையினர் கைது செய்துள்ளனர்.காவல்நிலையத்தில் வைத்துவிசாரித்தபோது, வழக்கம்போல் அவர்கழிப்பறையில் வழுக்கி விழுந்ததில்இடது கை, காலில் எலும்புமுறிவு ஏற்பட்டுள்ளது.அவருக்கு அரசு மருத்துவமனையில்சிகிச்சை அளிக்கப்பட்டு வரும்அதேவேளையில், காவல்துறைவிசாரணையும் தீவிரமாகநடந்து வருகிறது. மேல...
சேலம்: அதிமுக வேட்பாளருக்கு பாமக ‘டிக்டேட்’!

சேலம்: அதிமுக வேட்பாளருக்கு பாமக ‘டிக்டேட்’!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
அதிமுக வேட்பாளர், பத்திரிகையாளர்கள் கேள்விக்கு பதில் சொல்ல தடுமாறியபோது, அவரை மேற்கொண்டு பேச விடாமல் பாமக நிர்வாகி அருள் அழைத்துச்சென்றது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.   சேலம் மக்களவை தொகுதியில் திமுக - அதிமுக நேரடியாக மோதுகிறது. கடந்த 22ம் தேதி திமுக வேட்பாளர் எஸ்.ஆர். பார்த்திபன் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில், அதிமுக வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணன், திங்கள்கிழமை (மார்ச் 25, 2019) சேலம் மாவட்ட தேர்தல் அதிகாரியான ரோகிணியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். தனது பெயர் ராசி, நட்சத்திரம், நல்லநேரம் பார்த்து குளிகை காலத்தில் பகல் 2.40 மணியளவில் அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். அதிமுக எம்எல்ஏ வெங்கடாஜலம் மற்றும் தோழமைக் கட்சிகளின் நிர்வாகிகள் அருள் (பாமக), ராதாகிருஷ்ணன் (தேமுதிக), கோபிநாத் (பாஜக) ஆகியோர் வேட்புமனு தாக்கலின்போது உடன் இருந்தனர்.   முன்னதாக, சேலம...
திண்ணை: அதிமுக கூட்டணிக்குள் பாமக வந்தது எப்படி?

திண்ணை: அதிமுக கூட்டணிக்குள் பாமக வந்தது எப்படி?

அரசியல், திண்ணை, முக்கிய செய்திகள்
''உஷ் அப்பாடா....இப்பவே இப்படி சுட்டெரிக்குதே... இன்னும் அக்னி நட்சத்திர சீசன்லலாம் நம்மாள பகல்ல வெளியே தலைக்காட்டக்கூட முடியாது போலருக்கு..." அடர்த்தியான தலைமுடி ஊடாக வழிந்த வியர்வையைத் துடைத்தபடி திண்ணையில் வந்து அமர்ந்தார் பேனாக்காரர். ''வெயில் மட்டுமா...? அரசியல் களமும் சூடுபிடிச்சிடுச்சே. இப்படியே கொளுத்துனா கத்திரி வெயில்ல மூளை தெறிச்சி வெளியே விழுந்துடும் போல. ஆனாலும் அதெல்லாம் மூளை இருக்கறவன் பட வேண்டிய கவல. எனக்கெதுக்கு...'' என தன்னைத்தானே எள்ளல் செய்து கொண்டார் நக்கல் நல்லசாமி.   ''சரி.... சரி... சட்டுபுட்டுனு வந்த தகவல சொல்லிட்டுப் போயிடறேன்... இன்னும் அரசியல் சேதி நிறைய எழுத வேண்டியிருக்கு. அதிமுக, திமுகவோட எந்தக் காலத்துலயும் கூட்டு வைக்க மாட்டோம். வேணும்னா பத்திரம்கூட எழுதித் தற்ரோம்னு சின்ன மாங்கா sorry... சின்ன அய்யா சொன்னாருல்ல...?'' ''ஆம...
ரஜினி நாய் கூட எம்எல்ஏ ஆகிவிடும்!: அன்புமணி ராமதாஸ் தாக்கு

ரஜினி நாய் கூட எம்எல்ஏ ஆகிவிடும்!: அன்புமணி ராமதாஸ் தாக்கு

அரசியல், அரியலூர், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழகத்தின் பால்தாக்கரே போல செயல்பட்டு வரும் பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ், அவருடைய மகன் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் சினிமாக்காரர்கள் மீதும் குறிப்பாக ரஜினிகாந்த் மீதும் கடும் விமர்சனங்களை முன்னெடுத்து வருகின்றனர். ரஜினியின் தயாரிப்பில் பாபா படம் வெளியானபோது, ரஜினியின் மீதான பாமக பாய்ச்சல் உச்சக்கட்டத்தில் இருந்தது. பல திரைமறைவு சமரசங்களுக்குப் பிறகு, பாபா படப்பிரச்னை முடிவுக்கு வந்தது. ஆனாலும், ஒட்டுமொத்தமாகவே சினிமாக்காரர்கள் மீதும், அந்த துறை மீதான தாக்குதல் போக்கையும் பாமக இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. கருணாநிதியின் முதுமை, ஜெயலலிதா மறைவு காரணமாக தமிழக அரசியலில் இயல்பாகவே ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. மக்களின் மனம் கவர்ந்த தலைவர்கள் இல்லாத நிலையில், ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் தங்களுடைய அரசியல் ஆசைகளை வெளிப்படையாகவே பேசி வருகின்றனர். கடந்த மே மாதம் ...