Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சொந்த வீடு எல்லோருக்கும் சாத்தியம்!: ‘விஜயஸ்ரீ பில்டர்ஸ்’ டி.ஜே. ராஜேந்திரன்

-வெற்றி பிறந்த கதை-

 

சேலத்தின் முக்கிய
பிரமுகர்களுள் ஒருவர்…
சிவந்த கரங்களுக்குச்
சொந்தக்காரர் என
வெகு சிலரையே சொல்ல
முடியும். அந்தப்பட்டியலில்
டி.ஜே.ராஜேந்திரன், தவிர்க்க
முடியாத ஆளுமை.

 

மிகச்சமீபத்தில், பழனியில் வனதுர்க்கை, மகிஷாசுரமர்த்தினி கோயிலுக்கு கோடிக்கணக்கில் செலவிட்டு, மண்டபம் கட்டிக்கொடுத்து, கும்பாபிஷேகம் நடத்தி முடித்த அருளாளர். கல்வி உதவி கேட்டு செல்லும் ஏழைகளுக்காக இவருடைய அலுவலக கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும் என்றால் மிகை இல்லை.

 

‘விஜயஸ்ரீ பில்டர்ஸ்’ டி.ஜே. ராஜேந்திரன்

தமிழகம் முழுவதும் கல்லூரி, பள்ளி கட்டடங்களை தனது ‘விஜயஸ்ரீ கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்’, விஜயஸ்ரீ பில்டர்ஸ், விஜயஸ்ரீ புரமோட்டர்ஸ் நிறுவனங்களின் மூலம் கட்டிக்கொடுத்து, சேலத்தின் பெயரை பறைசாற்றி வருகிறார். உழைப்பால் உயர்ந்த டி.ஜே.ராஜேந்திரன் அவர்களை, ‘வெற்றி பிறந்த கதை’ பகுதிக்காக அவருடைய அலுவலகத்தில் ஒரு மாலைப் பொழுதில் சந்தித்தோம். சமூக சேவைகளுக்காக அவர் பெற்றிருந்த விருதுகள், அறை முழுவதும் நிறைந்து இருந்தன. அது, அலுவலகம் அல்ல; கோயிலாகவே ஆக்கியிருந்தார். இனி அவர்…

 

”எனது சொந்த ஊர் தர்மபுரி. அப்பா, ஜெயகாந்தன், அம்மா, காமாட்சி. ஜே.கே ரோடுவேஸ் என்ற பெயரில் டிரான்ஸ்போர்ட் கம்பெனியை அப்பா நடத்தி வந்தார். அதனால், என் இளமைக்காலம் என்பது தொழில் மற்றும் விவசாயம் ஆகிய இரண்டும் கலந்தே இருந்தது. பத்தாம் வகுப்புடன் பள்ளிப்படிப்பு முடிந்தது. பெரிதாக படிக்கவில்லை என்றாலும், நாமே சொந்தமாக ஏதாவது தொழில் செய்ய வேண்டும். அதுவும் யாரையும் ஏமாற்றாமல் சரியான தொழிலாக இருக்க வேண்டும் எனக்கருதினேன்.

 

ஏற்கனவே ரியல் எஸ்டேட் தொழிலிலும், சிறு சிறு அளவில் வீடுகளைக் கட்டிக்கொடுத்த வகையில் கொஞ்சம் அனுபவமும் இருந்ததால் கட்டுமானத் துறையையே தேர்ந்தெடுத்தேன். எல்லா காலத்திலும் இந்த துறைக்கு வரவேற்பு இருப்பதும் முக்கிய காரணம். அப்படி உருவானதுதான் ‘விஜயஸ்ரீ கன்ஸ்ட்ரக்ஷன்’ நிறுவனம். இந்த நிறுவனம் தொடங்கி, 25 வருடங்கள் ஓடிவிட்டன.

 

எனக்கு எல்லாமே என் மனைவிதான். வேலை விஷயமாக அடிக்கடி வெளியூர் சென்று விடுவேன். இரவு வீட்டுக்கு வர தாமதம் ஆகும். அதனால் பிள்ளைகள் வளர்ப்பில் என்னைவிட என் மனைவியின் பங்களிப்புதான் அதிகம். ஆகையால், நான் தொடங்கிய நிறுவனத்துக்கு என் மனைவி விஜயஸ்ரீயின் பெயரையே வைத்தேன்.

 

நான் பள்ளிப்படிப்பைக்கூட தாண்டவில்லை. ஆனால், என் கட்டுமான நிறுவனத்தின் மூலம் பி.இ., சிவில், டிப்ளமோ சிவில் படித்த 65க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்து உள்ளேன்.

எங்கள் நிறுவனத்தின் மூலம் சேலம் எருமாபாளையத்தில் குளூனி வித்யா நிகேதன் சிபிஎஸ்இ பள்ளி, கோவையில் பார்க் இன்ஜினியரிங் கல்லூரி, தமிழ்நாடு இன்ஜினியரிங் கல்லூரி, ஆர்விஎஸ் கல்விக்குழுமம், நாமக்கல்லில் மஹாபாரதி, லிட்டில் ஏஞ்சல் ஆகிய பள்ளி கட்டடங்களும், சென்னையில் நாலைந்து கல்லூரி கட்டடங்கள் என பல லட்சம் சதுரடி கட்டடங்களைக்கட்டி கொடுத்து இருக்கிறோம்.

 

தவிர, கடந்த 10 ஆண்டுகளாக எங்களது விஜயஸ்ரீ புரமோட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் அபார்ட்மென்ட் குடியிருப்புகளையும் கட்டிக்கொடுத்து வருகிறோம்.

 

இந்த தொழிலில் பெரிய
சவால் என்றால், கட்டுமான
தொழிலாளர்களிடம் வேலை
வாங்குவதுதான். மேஸ்திரி,
சித்தாள் என படிக்காத
தொழிலாளர்களிடம்தான் வேலை
வாங்குகிறோம். அதனால்,
அறியாமையால்கூட
கட்டுமானப்பணிகளின்போது
சிறு விபத்துகளோ, உயிரிழப்புகளோ
நடந்து விடக்கூடாது என்பதில்
எப்போதும் கவனமாக இருக்க
வேண்டும். கட்டுமான
பணிகளின்போது இரவு, பகல்
பாராமல் நேரிலோ அல்லது
ஃபோன் மூலமாகவோ பணிகளை
கண்காணிப்பது அவசியம்.

 

தற்போது, கன்னங்குறிச்சியில் 72 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை ரூ.25 கோடியில் கட்டி வருகிறோம். இந்த புராஜக்ட் முடிந்ததும், கிச்சிப்பாளையத்தில் ரூ.120 கோடி பட்ஜெட்டில் 320 வீடுகள் கொண்ட குடியிருப்புகளை கட்ட திட்டமிட்டு இருக்கிறோம்.

 

கட்டுமான துறையில் எப்போதும்
துரிதமான செயல்பாடு அவசியம்.
ஏனெனில் சிமென்ட், செங்கல்,
மணல், ஜல்லி, இரும்பு கம்பி
உள்ளிட்ட கட்டுமான பொருட்களின்
விலைகளில் ஏற்றத்தாழ்வுகள்
இருந்து கொண்டே இருக்கும்.
அதனால், திட்டமிட்டபடி குறித்த
காலத்திற்குள் கட்டுமான பணிகளை
முழுவதும் முடிக்க வேண்டும்.

கட்டுமான பொருட்களை
மொத்தமாகவும், ரொக்கத்திற்கும்
கொள்முதல் செய்வதன் மூலமும்
நஷ்டத்தை தவிர்க்கலாம்.
இந்த தொழிலில் பணம், திறமை,
உழைப்பு ஆகிய மூன்றையும்விட
புராஜக்டை குறித்த நேரத்தில்
முடிக்க வேண்டும் என்ற
நேரம் தவறாமைதான்
மிக முக்கியமானது.

 

இன்றைக்கு பல கட்டுமான நிறுவனங்கள் அரசு திட்டங்களை டெண்டர் எடுத்து செய்து வருகின்றன. நாங்கள் ஒருபோதும் அரசு கட்டுமான பணிகளை டெண்டர் எடுக்க விரும்பியது இல்லை. அரசு விதிகள், பலருக்கு தேவையில்லாமல் பதில் சொல்ல வேண்டிய நிலை போன்ற பல காரணங்களால் அரசு திட்டங்களை டெண்டர் எடுப்பது கிடையாது. அத்துடன், எங்களது சொந்த நிறுவன கட்டுமான பணிகளே போதிய அளவில் இருப்பதும், அரசு கட்டுமான பணிகளை டெண்டர் எடுக்காததற்கு முக்கிய காரணமாகச் சொல்லலாம்.

 

சொந்த வீடு என்பதே நம் ஒவ்வொருவரின் கனவு. அதனால் குறைந்த பட்ஜெட்டில், எல்லோருக்கும் தரமான வீடுகளைக் கட்டிக்கொடுக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நிறுவனத்தின் ஆசை. ஆகையால், இப்போதுகூட இரண்டு பெட்ரூம், ஹால், கிச்சன் ரூம் வசதியுடன்கூடிய வீடுகளை ரூ.24 லட்சத்தில் வழங்குகிறோம்.

 

இதில், 20 லட்ச ரூபாய்க்கு வங்கியில் கடன் வசதி செய்து தருகிறோம். 2 பி.ஹெச்.கே. வசதியுள்ள வீட்டுக்கு சேலத்தில் ஒருவர் மாதம் ரூ.10 ஆயிரம் வாடகை கொடுக்க வேண்டும். இன்னும் ரூ.10 ஆயிரம் கூடுதலாக ஒதுக்கத் தயாராக இருந்தார் எனில் அவரது சொந்த வீடு கனவு நிச்சயம் நனவாகி விடும். அதற்கு நாங்கள் உத்தரவாதம். இவற்றில் ஜிம், லிப்ட் வசதிகளும் அடக்கம். உழைப்பை அதிகப்படுத்தி, லாபத்தைக் குறைத்துக் கொள்வதால்தான் எங்களால் இவ்வளவு குறைந்த விலைக்கு வீடுகளைக் கட்டிக்கொடுக்க முடிகிறது.

 

எல்லா தொழிலிலும் இருப்பதுபோல்
கட்டுமான தொழிலும் கடும்
போட்டிகள் நிலவுகின்றன.
என்னைப் பொருத்தவரை
போட்டியாளர்களை நான்
‘ரோல்மாடல்’ ஆகத்தான்
பார்க்கிறேன். ”சக போட்டியாளர்
ஒருவர், ஒரு புராஜக்டில்
50 வீடுகள் கட்டினார் என்றால்,
நாம் ஏன் 100 வீடுகள்
கட்டக்கூடாது?” என்றுதான்
சிந்திப்பேன். யாரையும் எதிரியாக
பார்க்காமல், பிறரிடம் இருந்து
ஏதாவது நாம் கற்றுக்கொள்ள
இருக்கிறதா என யோசிக்க
வேண்டும்.

 

கட்டுமானத் தொழிலில் உள்ள
யாரும் நான் சொல்வதை
அறிவுரையாக நினைக்க வேண்டாம்.
இந்த துறையில், லாபத்தை மட்டுமே
நோக்கமாக கருதாமல்
மனிதநேயத்துடன் நடந்து
கொள்வது மிக மிக அவசியம்.
சொந்த வீடு கட்ட வேண்டும்
என்ற கனவுகளுடன் ஒவ்வொருவரும்
வங்கியிலும், வெளியிலும்
கடன் வாங்கி நம்மிடம்
கட்டுமான பணிகளை
ஒப்படைக்கின்றனர்.
அதனால், குறித்த காலத்திற்குள்
வீடுகளைக் கட்டி
வாடிக்கையாளர்களுக்கு
ஒப்படைத்துவிட வேண்டும்.

 

பில்டர்கள் தாமதிக்கும்
ஒவ்வொரு நாளுக்கும்,
வாடிக்கையாளர் தேவையில்லாமல்
கடனுக்கு வட்டியும்,
ஏற்கனவே குடியிருந்து வரும்
வீட்டுக்கு வாடகையும் செலுத்த
வேண்டிய நிலை ஏற்படும்.
அத்தகைய மன உளைச்சலுக்கு
வாடிக்கையாளர்களை
நாம் ஆளாக்கி விடக்கூடாது.
எல்லாவற்றுக்கும்மேல்,
ஒருபோதும் தரத்தில்
சமரசம் செய்து
கொள்ளக்கூடாது.

 

பொதுவாக நான் விளம்பரத்தை தேடிக்கொள்ள விரும்புவதில்லை. நீங்கள் புதிதாக தொடங்கிய ‘புதிய அகராதி’ பத்திரிகையில் எழுத கேட்டதால், இதையெல்லாம் கூறுகிறேன். எந்த ஒரு மனிதனும் மக்கள் மத்தியில் ஒரு பெயர் பெற்று விளங்க வேண்டும். பெயர் பெற வேண்டுமானால், அவனுக்கென்று, அடையாளப்படுத்த ஒரு தொழில் இருக்க வேண்டும். அந்தத் தொழிலில் எப்போதும் சின்சியாரிட்டி, ஒழுக்கம், தர்மம் இருக்க வேண்டும்,” என்று தீர்க்கமாக சொல்லி முடித்தார், டி.ஜே. ராஜேந்திரன்.

 

Contact- Mr.D.J.Rajendran: 94432 60657, 0427-241110.

(‘புதிய அகராதி’ 2016 ஜூன் திங்கள் இதழில் இருந்து)

கருத்துகளை பகிர: puthiyaagarathi@gmail.com, selaya80@gmail.com / 9840961947