Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: whistle

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோவும் பிரஷ்ஷர் குக்கரின் கடைசி விசிலும்!

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோவும் பிரஷ்ஷர் குக்கரின் கடைசி விசிலும்!

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சாவுக்கு ஒரு ஓட்டு; நோவுக்கு ஒரு ஓட்டு என்று அரசியல் செய்வதில் அதிமுககாரர்கள் கில்லாடிகள் என்பதற்கு, அப்பல்லோவில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றது தொடர்பாக இன்று (டிசம்பர் 20, 2017), வெளியான வீடியோ இன்னுமொரு சான்று. ஜெயலலிதா இறந்து ஓராண்டு ஆகியும் அவருடைய மரணம் குறித்த சர்ச்சைகள் இறக்கை கட்டிப் பறந்து கொண்டுதான் இருக்கின்றன. யோசித்துப் பார்த்தால், அம்மா இட்லி சாப்பிட்டார் என்பது முதல் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாக இயக்குநர் பிரதாப் சி ரெட்டியின் அண்மைய அறிக்கை முதல் எல்லாவற்றிலும் ஒரு முரண்பாடு இருப்பதை அறிய முடியும். ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போதே சீரியஸ் நிலையில்தான் இருந்தார் என்று பிரதாப் சி ரெட்டி சொன்னதற்கு, சட்டம்&ஒழுங்கு கெட்டுவிடக்கூடாது என்பதுதான் காரணம் என நியாயம் கற்பிக்கிறார். நாளை (டிசம்பர் 21, 2017) ஆர்கே நகர்
‘ஸ்பைடர்’ – திரை விமர்சனம்!

‘ஸ்பைடர்’ – திரை விமர்சனம்!

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் முதல் நேரடி தமிழ்ப்படம் 'ஸ்பைடர்'. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் நேற்று (செப். 27) வெளியாகி இருக்கிறது. இது ஒரு சைக்கோ திரில்லர் வகைமையிலான படம். இந்திய உளவுத்துறையில் ஃபோன் அழைப்புகளை டேப்பிங் செய்யும் பிரிவில் பணியாற்றுகிறார் ஹீரோ சிவா (மகேஷ்பாபு). சட்டத்திட்டங்களை மீறினால்தானே சாதாரண ஹீரோ, சூப்பர் ஹீரோ ஆக முடியும்?. ஸ்பைடர் ஹீரோவும் அப்படித்தான். தனது 'ஸ்பை ஆப்' மூலம், அபாயகரமான சூழலில் சிக்கித்தவிக்கும் மக்களின் பிரச்னைகளை கண்டறிந்து, அதாவது ஃபோன் பேச்சை ஒட்டுக்கேட்டு, பிரச்னையில் சிக்கும் முன்பே அவர்களை மீட்கும் வேலைகளில் ஈடுபடுகிறார் மகேஷ்பாபு. இளம்பெண் ஒருவர் சிக்கலில் மாட்டிக்கொண்டிருக்க, அவரை காப்பாற்றுவதற்காக உடன் பணியாற்றும் சக பெண் போலீஸ் ஒருவரை அந்த பெண்ணின் வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார். மறுநாள் பெண் ப