Thursday, April 18மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: waste water

சேலத்தில் நடுத்தெருவில் உருவான திடீர் கழிவு நீரோடை! மாநகராட்சி மனசு வைக்குமா?

சேலத்தில் நடுத்தெருவில் உருவான திடீர் கழிவு நீரோடை! மாநகராட்சி மனசு வைக்குமா?

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலத்தில், பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழியின் வழியாக கழிவு நீர் வெளியேறி, நடுத்தெருவில் ஓடையாக பாய்ந்தோடுவதால், சாலையும் சிதிலமடைந்துள்ளதோடு, சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. சேலம் சின்னத்திருப்பதி பாரதி நகர், உடையார் தெரு, மாரியம்மன் கோயில் எதிரில் இரண்டு சாலைகள் சந்திக்கும் இடத்தில், பாதாள சாக்கடைத் திட்டத்தின் கீழ் குழி தோண்டப்பட்டு உள்ளது. அதன்மீது சிமெண்ட் மூடி போட்டு மூடப்பட்டு உள்ளது. மாநகராட்சியின் 8 மற்றும் 7 ஆகிய இரு கோட்டங்களுக்கும் பொதுவாக உள்ள இந்த சாலை வழியாகத்தான் அஸ்தம்பட்டி - ஏற்காடு முதன்மைச் சாலைக்கு வந்தடைய வேண்டும். அதனால் எப்போதும் இந்த சாலையில் வாகன போக்குவரத்தும் அதிகம்.   கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, பாதாள சாக்கடைக் குழி மீது போட்டப்பட்டிருந்த சிமெண்ட் மூடி திடீரென்று உடைந்தது. அன்று முதல், அந்தக் குழி வழியாக கழிவு நீர் பெருக்கெடுத்த