Wednesday, April 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: village panchayats

எட்டு வழிச்சாலைக்கு எதிராக ஒரு பிரம்மாஸ்திரம்!;  நாளை கிராம சபைக்கூட்டம்… மறந்துடாதீங்க!!

எட்டு வழிச்சாலைக்கு எதிராக ஒரு பிரம்மாஸ்திரம்!; நாளை கிராம சபைக்கூட்டம்… மறந்துடாதீங்க!!

காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, சேலம், தகவல், தமிழ்நாடு, தர்மபுரி, திருவண்ணாமலை, முக்கிய செய்திகள்
  எட்டு வழிச்சாலைக்கு எதிராக போராடும் விவசாயிகள் நாளை, (ஆகஸ்ட் 15, 2018) நடைபெற உள்ள கிராம சபைக்கூட்டத்தில் அதற்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வருவதன் மூலம் திட்டத்தை முடக்கி வைக்க முடியும் என்கிறார்கள் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள்.   கிராம மக்களுக்கு இருக்கும் உச்சபட்ச அதிகாரத்தை நிருவுவதற்கான ஒரே இடம் கிராம சபைக்கூட்டம் எனலாம். இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி, ஓராண்டில் ஜனவரி 26 (குடியரசு தினம்), மே 1 (தொழிலாளர் தினம்), ஆகஸ்ட் 15 (சுதந்திர தினம்), அக்டோபர் 2 (காந்தி ஜெயந்தி) ஆகிய நான்கு நாள்களில் கண்டிப்பாக கிராம சபைக்கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். இவை தவிர, தேவைக்கேற்ப சிறப்பு கிராம சபைக்கூட்டமும் நடத்திக்கொள்ள முடியும். அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 12618 கிராம ஊராட்சிகளிலும் நாளை (ஆகஸ்ட் 15) கிராம சபைக்கூட்டம் நடைபெறுகிறது. கடந்த காலங்களில் பல ஊராட்சிகளில் கிர