Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: vijayabaskar

அரசுப் பேருந்து டிக்கெட் கட்டணம் திடீர் உயர்வு; நாளை முதல் அமலாகிறது

அரசுப் பேருந்து டிக்கெட் கட்டணம் திடீர் உயர்வு; நாளை முதல் அமலாகிறது

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
அரசுப் பேருந்து பயணக் கட்டணத்தை திடீரென்று உயர்த்தி தமிழக அரசு இன்று (ஜனவரி 19, 2018) இரவு உத்தரவிட்டுள்ளது. புதிய கட்டண உயர்வு நாளை முதல் அமலாகிறது. தமிழக அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள், ஊதிய உயர்வு, சேமநலநிதி உள்ளிட்ட பணப்பலன்களை உடனடியாக வழங்கக்கோரி போகி பண்டிகைக்கு முதல் வரை தொடர்ந்து ஐந்து நாள்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். அவர்களுக்கு முதல்கட்டமாக 750 கோடி ரூபாய் பணப்பலன்களை ஒதுக்கி அரசு அறிவித்ததை தொடர்ந்து, போராட்டத்தைக் கைவிட்டனர். அந்தப் போராட்டத்திற்கு சில நாள்களுக்கு முன்பிருந்தே அரசுப்பேருந்துகளின் பயணக் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான பேச்சுகள் உலா வந்தன. போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் காரணமாக கட்டண உயர்வு அறிவிப்பு தாமதம் ஆனது. இந்நிலையில், அரசுப் பேருந்து பயணக் கட்டணங்களை அதிரடியாக உயர்த்தி தமி-ழக அரசு இன்று அறிவித்துள்ளது. போ
சட்டப்பேரவைக்குள் டிடிவி தினகரனின் ‘ஸ்லீப்பர் செல்’!; அமைச்சருடன் மோதல்!!

சட்டப்பேரவைக்குள் டிடிவி தினகரனின் ‘ஸ்லீப்பர் செல்’!; அமைச்சருடன் மோதல்!!

அரசியல், ஈரோடு, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழக சட்டப்பேரவையில் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் பதிலில் திருப்தி இல்லை என்று ஆளுங்கட்சி எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் கடுமையாக ஆட்சேபித்தது, பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை அதிமுக ஆட்சியில் இருந்தாலும், எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும் ஜெயலலிதாவைத் தவிர வேறு யாரும் ஊடகங்களுக்கு தன்னிச்சையாக பேட்டி அளிக்கக்கூட மாட்டார்கள். பிரதான எதிர்க்கட்சியான திமுகவைச் சேர்ந்தவர்களுடன் கட்சிகளைக் கடந்து நட்பு பாராட்டினாலோ, தொழில் ரீதியிலான தொடர்பு வைத்திருப்பது தெரிய வந்தாலோ உடனடியாக அதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்டு விடுவர். இத்தகைய ராணுவக் கட்டுப்பாடு எல்லாமே ஜெயலலிதா உயிருடன் இருந்த வரை மட்டுமே. அவர் மறைவுக்குப் பின்னர் அக்கட்சி எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் எல்லோருமே ஊடகங்களிடம் தனித்து பேசத்தொடங்கிவிட்டனர். காலையில் ஓர் எம்எல்ஏ பேசியதை மாலைய
தமிழகம்: அடுத்தது ஆட்சி கலைப்புதான்!; காவிகள் திட்டம் தயார்

தமிழகம்: அடுத்தது ஆட்சி கலைப்புதான்!; காவிகள் திட்டம் தயார்

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம், உள்கட்சி பூசல் உள்ளிட்ட பிரச்னைகளால் தமிழகத்தில் ஆளும் கட்சி ஸ்திரமற்ற நிலையில் இருப்பதை தொடர்ந்து, இந்த ஆட்சியை கலைத்துவிட்டு குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்தும் வேலைகளில் காவி கோஷ்டி மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவை கைப்பற்றுவதில் 'பணிவு புகழ்' ஓ.பன்னீர்செல்வத்துக்கும், மன்னார்குடி கும்பலுக்கும் இடையே ஏற்பட்ட போட்டியால் அக்கட்சிக்குள் கடும் பூசல்கள் உருவாயின. ஒருகட்டத்தில், கட்சிக்கு சம்பந்தமே இல்லாத ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கூட அதிமுகவுக்கு சொந்தம் கொண்டாடும் காமெடிகளும் அரங்கேறின. இப்படி நாளொரு பரபரப்பும், மணிக்கொரு 'பிரேக்கிங் நியூஸ்'களுமாக தமிழக அரசியல் களம் இருந்த நிலையில், ஊழல் வழக்கில் சசிகலா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார். கிடைத்த 'கேப்'பில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரா