Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: vice chancellor swaminathan

அங்கமுத்து தற்கொலை… அகலாத மர்மம்… ஆக்ஷன் எடுப்பாரா ஆளுநர்? பெரியார் பல்கலை பேராசிரியர்கள் எதிர்பார்ப்பு!

அங்கமுத்து தற்கொலை… அகலாத மர்மம்… ஆக்ஷன் எடுப்பாரா ஆளுநர்? பெரியார் பல்கலை பேராசிரியர்கள் எதிர்பார்ப்பு!

கிருஷ்ணகிரி, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, நாமக்கல், முக்கிய செய்திகள்
  பெரியார் பல்கலை முன்னாள் பதிவாளர் அங்கமுத்து தற்கொலையில் அகலாத மர்ம முடிச்சுகளையும், பல்கலையில் மலிந்து கிடக்கும் ஊழல்கள் குறித்தும், பட்டமளிப்பு விழாவுக்கு வருகை தரும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முழுமையாக விசாரிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பேராசிரியர்களிடையே ஏற்பட்டுள்ளது.   பட்டமளிப்பு விழா சேலம் பெரியார் பல்கலையில் பதினெட்டாவது பட்டமளிப்பு விழா, செவ்வாய்க்கிழமை (நவம்பர் 27, 2018) நடக்கிறது. பல்கலை வேந்தரும், தமிழக ஆளுநருமான பன்வாரிலால் புரோஹித் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார்.   அதேநேரம், பல்கலையில் மலிந்து கிடக்கும் ஊழல் புகார்கள் மீதும் ஆளுநர் கவனம் செலுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் பேராசிரியர்கள் மத்தியில் எழாமல் இல்லை.   இது தொடர்பாக முன்னாள் சிண்டிகேட் உறுப்பினர் ஒருவரும், பல்கலை தரப்பில் பேராசிரியர்கள் சிலரும் விரிவாக நம்
நீதிமன்ற உத்தரவை காற்றில் பறக்கவிடும் பெரியார் பல்கலை.! #PeriyarUniversity #பெரியார்பல்கலை

நீதிமன்ற உத்தரவை காற்றில் பறக்கவிடும் பெரியார் பல்கலை.! #PeriyarUniversity #பெரியார்பல்கலை

கல்வி, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  உயர்நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தாமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருவதோடு, நீதிமன்ற அவமதிப்பிலும் ஈடுபட்டு வருவதாக பெரியார் பல்கலை மீது அதிருப்தி கிளம்பியுள்ளது.   நீதிமன்றம், காவல்துறை உத்தரவுகள் எல்லாம் எப்போதுமே விளிம்புநிலை மக்களை மட்டுமே கட்டுப்படுத்துகின்றன. அதிகார பலம், பொருளாதார பலம் கொண்டவர்கள் பெரும்பாலும் எவ்வித சட்டவிதிகளையும் முறையாக பின்பற்றுவதில்லை. அதற்கு சேலம் பெரியார் பல்கலைக்கழகமும் விதிவிலக்கு அல்ல. பெரியார் பல்கலையில் பொருளாதாரத்துறை உதவி பேராசிரியராக பணியாற்றி வருபவர் வைத்தியநாதன். பத்திரிகைளுக்கு பல்கலையைப் பற்றி தவறாக செய்திகள் கொடுத்ததாக அவரிடம் விளக்கம் கேட்டு, அப்போதிருந்த துணைவேந்தர் சுவாமிநாதன் குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கினார். இந்தப் புகாரின்பேரில், அவர் ஏப்ரல் 4, 2017ம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.   இச்சம்பவத்திற்குப்
முன்னாள் பதிவாளர் தற்கொலை வழக்கிற்கு மூடுவிழா?  முக்கிய குற்றவாளிகளை தப்பவைக்க சதித்திட்டம்

முன்னாள் பதிவாளர் தற்கொலை வழக்கிற்கு மூடுவிழா? முக்கிய குற்றவாளிகளை தப்பவைக்க சதித்திட்டம்

அரசியல், ஈரோடு, கிருஷ்ணகிரி, குற்றம், சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, நாமக்கல், முக்கிய செய்திகள்
  சேலம் பெரியார் பல்கலையில், பணி நியமனத்தில் பல கோடி ரூபாய் வரை ஊழல் நடந்துள்ளதாக கூறப்படும் புகாரில் முக்கிய புள்ளியாகச் சொல்லப்படும் முன்னாள் துணைவேந்தர் சுவாமிநாதனை தப்ப வைக்கும் நோக்கில், முன்னாள் பதிவாளர் அங்கமுத்து தற்கொலை வழக்கை இழுத்து மூடும் வேலையில் காவல்துறையினர் இறங்கியுள்ளதாக பரபரப்பு தகவல்கள் கிளம்பியுள்ளன. பெரியார் பல்கலைக்கழகத்தில் கடந்த 2012-2015 காலக்கட்டத்தில் பதிவாளராக இருந்தவர் அங்கமுத்து. அதற்கு முன் இதே பல்கலையில் அவர் உடற்கல்வி இயக்குநராகவும் இருந்தார். அப்போது துணைவேந்தராக இருந்த சுவாமிநாதன், உதவி பேராசிரியர்களை நியமிக்க 25 லட்சம் ரூபாயிலிருந்து 45 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெற்றதாக புகார்கள் எழுந்தன.     குறிப்பாக, சுவாமிநாதன் பணியில் இருந்த 2014-2017 காலக்கட்டத்தில், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத 136 பணியிடங்கள் நிரப்பப்