Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: vellore

ஒரு குடும்பம்; 6 பிள்ளைகள்; 5 பேருக்கு பார்வை இல்லை; ஒளி கொடுக்குமா அரசாங்கம்?

ஒரு குடும்பம்; 6 பிள்ளைகள்; 5 பேருக்கு பார்வை இல்லை; ஒளி கொடுக்குமா அரசாங்கம்?

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, தர்மபுரி, முக்கிய செய்திகள், வேலூர்
சி-ற-ப்-பு-க்-க-ட்-டு-ரை ''ஒரு ஊர்ல ஓர் அப்பா அம்மா இருந்தாங்களாம். அவங்களுக்கு 6 பிள்ளைகளாம். அதுல, அஞ்சு பிள்ளைகளுக்கு கண் பார்வை தெரியாதாம்....'' எதிர்காலத்தில் இப்படி ஒரு கதை குழந்தைகளிடம் சொல்லப்படலாம். இது கதை அல்ல. நிஜம். வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் ராச்சமங்கலம் அருகே உள்ளது புறத்தார் வட்டம். இந்த ஊரைச் சேர்ந்த தண்டபாணி - சரஸ்வதி தம்பதிக்கு கோவிந்தம்மாள் (28), காஞ்சனா (27), ஏழுமலை (26), வெங்கடேசன் (24), பவித்ரா (22), இசை தீபா (19) ஆகிய பிள்ளைகள். இவர்களில் பவித்ரா தவிர, மற்ற ஐந்து பேருக்கும் காதுகளே கண்கள். எந்த பாவமும் செய்திராதபோதும் இயற்கை அந்த ஒரு குடும்பத்தை அப்படி சபித்திருக்கக் கூடாது. இங்குதான் கடவுளின் மீதான நம்பகத்தன்மையும் கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது. கோவிந்தம்மாள், சரஸ்வதி தம்பதி இன்றைக்கு உயிருடன் இல்லை. பிள்ளைகள் எல்லோரும் வளர்ந்து ஆளாகிவிட்ட நிலையில், இத
நீட் தேர்வு: போராட்டக் களமானது தமிழகம்!

நீட் தேர்வு: போராட்டக் களமானது தமிழகம்!

கல்வி, கோயம்பத்தூர், சென்னை, தஞ்சாவூர், தமிழ்நாடு, திருவாரூர், முக்கிய செய்திகள், விழுப்புரம்
நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பரவலாக மாணவர்கள் போராட்டம் வெடித்துள்ளது. உள்கட்சி பிளவுகளால், ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளவே தடுமாறிக் கொண்டிருக்கும் தமிழக அரசு, போராட்டங்களைக் கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் கையறு நிலையில் இருக்கிறது. முத்துக்குமார், செங்கொடி ஆகியோரின் உயிர் தற்கொடைகளைத் தொடர்ந்து தமிழகத்தில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்தது. அதேபோல், மருத்துவப் படிப்பு கானலான விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் மரணம் காரணமாக, தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் வெடித்துள்ளது. கடந்த சில நாள்களாகவே வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வாயிலாக 'மெரீனாவில் ஒன்றுகூடுவோம்' என்ற பெயரில் தகவல்கள் பரவின. இதனால் உஷார் அடைந்த தமிழக காவல்துறை, மெரீனா கடற்கரையில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியது. கடற்கரை பகுதியில் குழுக்களாக சுற்றுவோ
துணிச்சலின் முகவரி  மீனாட்சி!

துணிச்சலின் முகவரி மீனாட்சி!

சென்னை, மகளிர், மதுரை, வேலூர்
''தமிழகத்தின் முதல் பெண் தீயணைப்பு அலுவலர்" "இப்போதுள்ள இளம்பெண்கள் எதையும் ஈஸியாக எடுத்துக்கொள்கிறார்கள். சொடுக்குப்போட்ட மாத்திரத்தில் எல்லாமே கிடைத்துவிட வேண்டும் என சினிமாத்தனமாக யோசிக்கிறார்கள். கனவுலகில் வாழ்கிறார்கள். அந்தக்கனவு கலையும்போதுதான், நிஜ வாழ்க்கை எவ்வளவு கடினமானது என்பது தெரியும். பெண்களோ, ஆண்களோ யாராக இருந்தாலும் உழைப்பைக் கைவிடக்கூடாது. உழைத்தால்தான் மேலே உயர முடியும். எளிமையாகச் சொல்வதென்றால், உன் வாழ்க்கை உன் கையில்," என்கிறார், மீனாட்சி விஜயகுமார். தமிழகத் தீயணைப்புத்துறையில் பெண்களும் பணியாற்றலாம் என்ற அறிவிப்பு வந்தபோது, மாவட்ட தீயணைப்பு அலுவலராக முதன்முதலில் இரண்டு பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர், மீனாட்சி விஜயகுமார். இவர் சென்னையில் நியமிக்கப்பட்டதால், அப்போதே பெரிய அளவில் ஊடக கவனம் பெற்றவர். துறையில் இன்றுவரை அப்பழுக்கின்றி பணியாற்றி வர