Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: VadaChennai Review

தோக்குறோமா ஜெயிக்குறோமாங்குறது முக்கியமில்ல… முதல்ல சண்ட செய்யணும்! வடசென்னை விமர்சனம்!! #VadaChennai

தோக்குறோமா ஜெயிக்குறோமாங்குறது முக்கியமில்ல… முதல்ல சண்ட செய்யணும்! வடசென்னை விமர்சனம்!! #VadaChennai

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழ் சினிமாக்காரர்களாலும் உலகப்படங்களை எடுக்க முடியும் என்பதற்கான புதிய நம்பிக்கையை தனது 'ஆடுகளம்', 'விசாரணை' படங்களின் வாயிலாக நிரூபித்த இயக்குநர் வெற்றிமாறனிடம் இருந்து, மற்றொரு உலகத்தர படமாக வெளிவந்திருக்கிறது, 'வடசென்னை'.   விளிம்புநிலை மக்களின் கதை:   'இது வடசென்னை மக்களின் வாழ்வியல் கதை அல்ல' என்று மிகுந்த ஜாக்கிரதை உணர்வுடன் சொல்லிவிட்டுத்தான் கதைக்குள் பயணிக்கிறார் வெற்றிமாறன். ஆனால், படம் நெடுக வடசென்னையில் வசிக்கும் பெரும்பான்மை விளிம்புநிலை மக்களின் வாழ்வியலைத்தான் வணிகத்தன்மையோடு கொடுத்திருக்கிறார்.   வடசென்னையில் அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, போதைப்பொருள் கடத்தல் என கொடிக்கட்டி பறக்கிறது இரண்டு கோஷ்டி. ஒன்று, குணா (சமுத்திரக்கனி) தலைமையிலான கோஷ்டி. இன்னொன்று, செந்தில் (கிஷோர்) கோஷ்டி. இந்த இரு கோஷ்டிகளுக்கு இடையே, கேரம் போர்டு சாம்பியனாவதும், அதன்மூலம