Wednesday, April 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: universities

பல்கலை, கல்லூரிகளில் இனி ‘நொறுக்க’, ‘கொறிக்க’ முடியாது! #JunkFood #UGC

பல்கலை, கல்லூரிகளில் இனி ‘நொறுக்க’, ‘கொறிக்க’ முடியாது! #JunkFood #UGC

இந்தியா, கல்வி, தகவல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  இந்தியாவில் இளம் தலைமுறையினர் அதிகளவில் உடல்பருமனால் அவதிப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை எச்சரித்துள்ளதை அடுத்து, அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளின் வளாகத்திலும் இனி நொறுக்குத்தீனிகள் (Junk Food) விற்கக்கூடாது என்று பல்கலை மானியக்குழு (யுஜிசி) அதிரடியாக தடை விதித்து உள்ளது.   இந்தியா எதிர்கொண்டுள்ள உடல்நலம் சார்ந்த முக்கிய பிரச்னைகளுள் ஒன்று, உடல்பருமன் (Obesity). 1975ம் ஆண்டுவாக்கில் இந்தியாவில் ஒரு மில்லியன் பேருக்கு உடல்பருமன் பிரச்னை இருந்தது. ஆனால், 2016ம் ஆண்டு நிலவரப்படி 30 மில்லியன் இந்தியர்கள் அதிக எடை அல்லது உடல்பருமனால் அவதிப்படுவதாக கூறுகிறது ஓர் ஆய்வு. அடுத்த ஏழு ஆண்டுகளில், அதாவது 2025ல் இப்பிரச்னைக்கு 70 மில்லியன் பேர் இலக்காகக் கூடும் என்றும் எச்சரிக்கிறது அந்த மருத்துவ ஆய்வு. பாட்டிக்கு இருந்த அதே பிரச்னை பேத்திக்கும் இருக்கலாம். அந்த வகையில் இது
துணை வேந்தர்கள் நியமனத்தில் சமூகநீதி புறக்கணிப்பு!; 496 பதவிகளில் 48 பேர் மட்டுமே ஓபிசி!!

துணை வேந்தர்கள் நியமனத்தில் சமூகநீதி புறக்கணிப்பு!; 496 பதவிகளில் 48 பேர் மட்டுமே ஓபிசி!!

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
நாடு முழுவதும் உள்ள இந்திய பல்கலைக்கழகங்களில் புதிதாக நியமிக்கப்பட்ட 496 துணைவேந்தர்களில் 48 பேர் மட்டுமே இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதனால் சமூகநீதி முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதில் அய்யம் எழுந்துள்ளது. இந்தியா போன்ற பன்முகக் கலாச்சாரம் நிலவும் நாடுகளில் இடஒதுக்கீடு சட்டம் இல்லாவிட்டால், பல இனங்களே எழுத்தறிவின்றி போய்விடும். அந்த சாபம், தலைமுறை தலைமுறையாக தொடரவும் கூடும். இதை உணர்ந்ததால்தான் திராவிட இயக்கங்கள், சமூகநீதிக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தன. வருகின்றன. ஆனால், பாஜக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் 'கிரீமி லேயர்' குறித்து அடிக்கடி பொது விவாதத்திற்கு வருவதை அறியலாம். அவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் அடிப்பொடிகள் கூட்டமோ, இட ஒதுக்கீடு என்பதை பிச்சை இடுவது அல்லது பிச்சை பெறுவதற்குச் சமம் என்பதுபோல் பேசுகின்றனர். என்னளவில் இட ஒதுக்க