Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Union Budget

பட்ஜெட் 2021-2022: விவசாயிகளுக்கு 16.50 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு; விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை தொடரும்!

பட்ஜெட் 2021-2022: விவசாயிகளுக்கு 16.50 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு; விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை தொடரும்!

இந்தியா, முக்கிய செய்திகள்
நடப்பு ஆண்டில் நெல், கோதுமை, கரும்பு உள்ளிட்ட விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்படும் என்றும், விவசாயிகளுக்கு 16.50 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார். நடப்பு 2021-2022ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப். 1) தாக்கல் செய்தார். முன்னதாக அவர், குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்தை அவருடைய மாளிகையில் சந்தித்துப் பேசினார்.   நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் பட்ஜெட்டிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நாடு சுதந்திரம் அடைந்தது முதல் முதன்முறையாக காகிதம் இல்லா பட்ஜெட் அறிக்கையை நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்தார். இதன்மூலம் 140 கோடி ரூபாய் மிச்சம
மத்திய பட்ஜெட்: கார்ப்பரேட்டுக்கு கம்பளம்; சாமானியருக்கு நொம்பளம்!

மத்திய பட்ஜெட்: கார்ப்பரேட்டுக்கு கம்பளம்; சாமானியருக்கு நொம்பளம்!

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
மக்களவையில் இன்று (பிப்ரவரி 1, 2018) தாக்கலான மத்திய பட்ஜெட், கார்ப்பரேட்டுகளுக்கு சலுகைகளையும், நடுத்தரவர்க்கத்தினரை ஏழைகளாகவும் மாற்றும் வகையில் இருப்பதாக மக்களிடம் அதிருப்தி கிளம்பியுள்ளன. 2018&2019ம் ஆண்டுக்கான பட்ஜெட், மக்களவையில் இன்று தாக்கலானது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். கடந்த 2014ல் ஆட்சிக்கு வந்த பாஜக அரசு தாக்கல் செய்யும் அதன் முழு ஆண்டுக்கான கடைசி பட்ஜெட் இதுவாகும். ஒரு பட்ஜெட் அறிக்கை என்பது, எப்போதும் அனைத்துத் தரப்பினரையும் திருப்திப்படுத்தியதாக வராற்றுச் சான்றுகள் இல்லை. மக்கள் நலனை மையப்படுத்திய பட்ஜெட்டாகவே இருந்தாலும் அதை எதிர்ப்பதுதான் எதிர்க்கட்சிகளிடையே நிலவும் பொதுவான போக்குகள். இன்று சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட், ஒட்டுமொத்தமாக மக்களுக்கு விரோதமானது என்று சொல்லிவிடலாகாது. ஆனால், அடுத்து வரவுள்ள சில மாநில சட்டப்பேரவை தேர்தல், அடு
பட்ஜெட்:  நடுத்தர வர்க்கத்தினருக்கு பெருத்த ஏமாற்றம்!

பட்ஜெட்: நடுத்தர வர்க்கத்தினருக்கு பெருத்த ஏமாற்றம்!

அரசியல், இந்தியா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
2018-2019ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்தினரும், சம்பளக்காரர்களும் எதிர்பார்த்த வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படாததால், பெரிதும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 2018-2019ம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையை நடுவண் நிதியமைச்சர் அருண் ஜெட்லி இன்று காலை 11 மணியளவில் வாசிக்கத் தொடங்கினார். பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு பிறகான பட்ஜெட் என்பதால், இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. மேலும், பாஜக அரசின் கடைசியாக வாசிக்கும் முழு ஆண்டுக்கான பட்ஜெட் என்பதால் பல்வேறு சலுகைகளும் எதிர்பார்க்கப்பட்டது. நாடு முழுவதும் 8.27 கோடி வரி செலுத்துவோர் உள்ளனர். அவர்களில் 1.88 கோடி பேர் மாத சம்பளக்காரர்கள். மாத சம்பளம் பெறுவோருக்கான வருமானவரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம் ஏதுமில்லை. முந்தைய நிலவரம் அப்படியே தொடரும். நிரந்தர கழிவு முறை மீண்டும் தொடரும். அதன்படி, ரூ.40 ஆயிரம் நிர