Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: underground drainage project

சேலம் மாநகராட்சி: பாதாள சாக்கடை திட்டமா? பகல் கொள்ளை திட்டமா? விரயமாகிறதா 216 கோடி?

சேலம் மாநகராட்சி: பாதாள சாக்கடை திட்டமா? பகல் கொள்ளை திட்டமா? விரயமாகிறதா 216 கோடி?

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலத்தில், சரிவர திட்டமிடப்படாமல் அமைக்கப்பட்டு வரும் பாதாள சாக்கடைத் திட்டத்தால் இதற்காக ஒதுக்கப்பட்ட மக்களின் வரிப்பணம் 216 கோடி ரூபாய் விழலுக்கு இரைத்த நீராகி விட்டதோ என்ற அய்யம் மக்களிடம் எழுந்துள்ளது. நகராட்சியாக இருந்த சேலம், கடந்த 1994ம் ஆண்டு மாநகராட்சியாக நிலை உயர்த்தப்பட்டது. சரிவர திட்டமிடப்படாத ஊரமைப்பு என்பதால், இன்றும் திறந்தவெளி சாக்கடை கால்வாய்களே நீக்கமற நிறைந்துள்ளன. இந்த நிலையில்தான், கடந்த 2006 - 2011 திமுக ஆட்சியின்போது, சேலம் மாநகராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டத்தை அமல்படுத்தும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.   இதையடுத்து, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை 23.2.2006ம் தேதி, இத்திட்டத்திற்கான அரசாணை (எண்: 63 (டி) வெளியிட்டது. முதல்கட்டமாக 149.39 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டது. இந்த நிதியில் அரசு மானியம் 10 கோடி ரூபாய்; சே