Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Udumalai Sankar

தமிழகத்தில் 5 ஆண்டுகளில் 187 ஆணவ படுகொலைகள்!

தமிழகத்தில் 5 ஆண்டுகளில் 187 ஆணவ படுகொலைகள்!

சென்னை, தமிழ்நாடு, திருப்பூர், முக்கிய செய்திகள்
தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 187 சாதி ஆணவப் படுகொலைகள் நடந்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார். உடுமலை சங்கர் ஆணவ படுகொலை வழக்கில் இன்று (டிசம்பர் 12, 2017) திருப்பூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கில் சங்கரின் மனைவியான கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உள்ளிட்ட 6 பேருக்கு இரட்டை தூக்கு தண்டனையும், ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், மற்றொருவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியது: ஆணவப் படுகொலைக்கு எதிரான இந்த தீர்ப்பை வரவேற்கிறோம். சாதியைக் கவுரவமாகக் கருதி, சங்கரை பட்டப்பகலில் வெட்டிப் படுகொலை செய்துள்ளனர். தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 187 சாதி ஆணவப் படுகொலைகள் நடந்துள்ளன. ஆனால்
தாயின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு!; கவுசல்யா

தாயின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு!; கவுசல்யா

தமிழ்நாடு, திருப்பூர், முக்கிய செய்திகள்
உடுமலை சங்கர் ஆணவப்படுகொலை வழக்கில் தாய் அன்னலட்சுமி உள்பட மூன்று பேரின் விடுதலையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று சங்கரின் மனைவி கவுசல்யா கூறியுள்ளார். உடுமலை சங்கரும், பழனியைச் சேர்ந்த கவுசல்யாவும் கடந்த ஆண்டு சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் காதலுக்கு தொடக்கம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வந்த கவுசல்யாவின் பெற்றோர் கூலிப்படையை ஏவி, கடந்த ஆண்டு மார்ச் 13ம் தேதி சங்கரை பட்டப்பகலில் பலர் முன்னிலையில் வெட்டிப் படுகொலை செய்தனர். கவுசல்யாவையும் அந்த கும்பல் அரிவாளால் வெட்டியது. எனினும், தீவிர சிகிச்சை காரணமாக அவர் உயிர் பிழைத்தார். இந்த வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, தாய் அன்னலட்சுமி, தாய் மாமன் பாண்டித்துரை, கொலை வழக்கில் உதவியாக இருந்ததாக பிரசன்னா உள்பட 11 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். வழக்கை விசாரித்த திருப்பூர் வன்கொடு