Wednesday, April 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Trent boult

இந்திய புலிகளை வீழ்த்தின நியூஸிலாந்து கிவிக்கள்!

இந்திய புலிகளை வீழ்த்தின நியூஸிலாந்து கிவிக்கள்!

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
ராஜ்கோட்டில் இன்று (நவம்பர் 4, 2017) நடந்த இரண்டாவது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை, நியூஸிலாந்து அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அந்த அணியின் கோலின் முன்ரோ சதம் அடித்து சாதனை படைத்தார். இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ட்வென்டி-20 கிரிக்கெட் போட்டி, குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று நடந்தது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில், முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி இந்தியா 1-0 கணக்கில் முன்னிலை பெற்றது. அதனால் இந்த ஆட்டத்திலும் வென்று தொடரைக் கைப்பற்றும் முனைப்புடன் இந்தியாவும், வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் நியூஸிலாந்தும் களமிறங்கின. அதிரடி தொடக்கம்: இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் முதன்முதலாக வாய்ப்பு பெற்றார். நியூஸிலாந்து அணியில் டிம் சவுத்தீ, டாம் லேதம் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு, கிளைன்
கிரிக்கெட்: நியூஸிக்கு 281 ரன் இலக்கு; கோஹ்லி புதிய சாதனை!

கிரிக்கெட்: நியூஸிக்கு 281 ரன் இலக்கு; கோஹ்லி புதிய சாதனை!

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
கனே வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவுடன் மூன்று ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. முதல் ஒரு நாள் போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (அக். 22, 2017) மதியம் 1.30 மணிக்கு தொடங்கியது. இந்திய அணியில் நீண்ட நாள்களுக்குப் பிறகு, தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இடம் பிடித்தார். டாஸ் வென்ற இந்திய அணி முதலில் மட்டை வீச்சை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான் ஜோடி பெரிய அளவில் சோபிக்கவில்லை. சிக்ஸர் அடித்து அதிரடியாக ஆட்டத்தைத் தொடங்கிய ரோஹித் ஷர்மா, 20 ரன்களில் ஆட்டமிழந்தார். ஷிகர் தவானும் 9 ரன்களில் வெளியேறினார். இருவருமே நியூஸியின் டிரன்ட் போல்ட் வேகத்தில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். தினேஷ்கார்த்திக் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்தார். அவரும் ஒருகட்டத்தில் 37 ரன்களில் த