Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Thirukkural

திரை இசையில் வள்ளுவம்: மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ… #தொடர்

திரை இசையில் வள்ளுவம்: மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ… #தொடர்

இலக்கியம், சினிமா, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
 #தொடர்   ஒன்றரை அடி குறட்பாவில் உலகளந்தவன் வள்ளுவன். அதனால்தான், குறளின் பெருமையை, 'கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்' என்றார், இடைக்காடர். ஏழு சீர் கொண்ட குறட்பாக்களை, பள்ளிப்பாடத்திட்டத்தில் சேர்த்ததால்தான் தமிழர்கள் ஓரளவுக்கேனும் அதை படித்து வைத்திருக்கிறோம். இல்லாவிட்டால், திருக்குறளின் மேன்மையைச் சொல்ல, வடநாட்டில் இருந்து தருண்விஜய் போன்று யாராவது வந்தால்தான் ஆச்சு. குறளின் இன்பத்தை, நாம் திரை இசை வழியாக இந்த தொடரில் பார்த்து வருகிறோம். கருத்துச் சொல்வதாக இருந்தாலும், மசாலா சேர்த்தே சொல்ல வேண்டியிருக்கிறது. இல்லாவிட்டால், 'போச்சுடா...இங்கேயும் பாடம் நடத்த ஆரம்பிச்சுட்டாங்களா...?' என வாசகர்கள் சட்டென அடுத்தப் பக்கத்தை திருப்பிவிடுவார்கள். அதனால்தான் குறளின் வலிமையை சினிமா பாடல்களின் ஊடாக சொல்லிக் கொண்டு இருக்கிறேன். காதலை, அதன் வலிமையை,
திரை இசையில் வள்ளுவம்: துயிலாத பெண் ஒன்று கண்டேன்…

திரை இசையில் வள்ளுவம்: துயிலாத பெண் ஒன்று கண்டேன்…

இலக்கியம், சினிமா, சிறப்பு கட்டுரைகள்
#தொடர்   இளங்கம்பன் கண்ணதாசன் பாடல்களில் கற்பனைத்திறம் மிகுந்திருப்பது காதல் பாடல்களிலா? தத்துவப் பாடல்களிலா? என ஆராய்ச்சியே மேற்கொள்ளலாம். அந்தளவுக்கு ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல. காதல் இன்பத்தை மட்டுமல்ல; அதன் தோல்வியால் உண்டாகும் வலியையும் பார்வையாளனுக்கு மிக எளிதாகக் கடத்திவிடும் திறம், கண்ணதாசனின் வரிகளுக்கு உண்டு. காதலின் உச்சநிலையை, வேதனைகளை, செவிகளாலும் உணர முடியும். அதுதான் கவியரசரின் வெற்றி.   காதல் உணர்வு இருபாலருக்கும் பொதுவானதுதான். எனினும், பெண்களே காதலால் பெரும் அல்லல் படுகின்றனர் என்பது வள்ளுவப் பெருந்தகையின் கூற்று. நிகழ்கால சாட்சிகளும் அதுதானே. காதலுற்ற ஒரு பெண், காதலனுக்கு ஓயாமல் அலைபேசியில் அழைத்துப் பேசிக்கொண்டிருப்பதை இப்போதும் நாம் காண்கிறோமே. (அந்த அலைபேசிக்கு 'ரீசார்ஜ்' செய்வது என்னவோ காதலன்தானே!). பகல் நேரங்களில் காதலனை பூங்கா, கடற்கரை, தி
உண்மை எது பொய் எதுன்னு ஒண்ணும் புரியலே… : திரை இசையில் வள்ளுவம்!

உண்மை எது பொய் எதுன்னு ஒண்ணும் புரியலே… : திரை இசையில் வள்ளுவம்!

இலக்கியம், சினிமா, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, திருநெல்வேலி, முக்கிய செய்திகள்
சங்க இலக்கியங்களில் திருக்குறளில் சொல்லப்பட்ட பல பாடல்களை அடியொற்றி, அவ்வையாரும் பாடியிருக்கிறார். இதை 'கட் - காப்பி - பேஸ்ட்' என்பதா? அல்லது உயர்ந்தவர்களின் சிந்தனைகள் ஒரே மாதிரிதான் இருக்கும் என்று புரிந்து கொள்வதா?. சங்க காலத்தில் நடந்ததை இப்போது எதற்கு சர்ச்சையாக்குவானேன். என் பாட்டுக்கு ஏதோ ஒன்று சொல்வதைவிட, திரைப்பாட்டுக்கும் வள்ளுவத்துக்கும் உள்ள தொடர்பைப் பற்றி பேசி விடுவதே நல்லதென படுகிறது. சங்ககாலக் கவிஞர்களின் படைப்புகளுக்குள் இருக்கும் ஒப்புமையைப் போல, திரைப்படப் பாடல் ஆசிரியர்களின் படைப்புகளுக்குள்ளும் எக்கச்சக்க ஒற்றுமைகள் உண்டு. இந்த தொடரின் ஆரம்பத்திலேயே 'நினைத்ததை முடிப்பவன்' (1975) படத்தில் கவிஞர் மருதகாசி எழுதிய, 'கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்...' என்ற பாடலுக்கும், வள்ளுவத்துக்கும் உள்ள தொடர்பைப் பற்றி விரிவாகவே பார்த்திருக்கிறோம். கவிஞர் மருதகாசிக்கு முன்ப