Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: thirai isai

திரை இசையில் வள்ளுவம்: மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ… #தொடர்

திரை இசையில் வள்ளுவம்: மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ… #தொடர்

இலக்கியம், சினிமா, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
 #தொடர்   ஒன்றரை அடி குறட்பாவில் உலகளந்தவன் வள்ளுவன். அதனால்தான், குறளின் பெருமையை, 'கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்' என்றார், இடைக்காடர். ஏழு சீர் கொண்ட குறட்பாக்களை, பள்ளிப்பாடத்திட்டத்தில் சேர்த்ததால்தான் தமிழர்கள் ஓரளவுக்கேனும் அதை படித்து வைத்திருக்கிறோம். இல்லாவிட்டால், திருக்குறளின் மேன்மையைச் சொல்ல, வடநாட்டில் இருந்து தருண்விஜய் போன்று யாராவது வந்தால்தான் ஆச்சு. குறளின் இன்பத்தை, நாம் திரை இசை வழியாக இந்த தொடரில் பார்த்து வருகிறோம். கருத்துச் சொல்வதாக இருந்தாலும், மசாலா சேர்த்தே சொல்ல வேண்டியிருக்கிறது. இல்லாவிட்டால், 'போச்சுடா...இங்கேயும் பாடம் நடத்த ஆரம்பிச்சுட்டாங்களா...?' என வாசகர்கள் சட்டென அடுத்தப் பக்கத்தை திருப்பிவிடுவார்கள். அதனால்தான் குறளின் வலிமையை சினிமா பாடல்களின் ஊடாக சொல்லிக் கொண்டு இருக்கிறேன். காதலை, அதன் வலிமையை,