Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: telecommunication

சரிவிலிருந்து மீண்ட இந்திய பங்குச்சந்தை! நிப்டி 17503; சென்செக்ஸ் 58664 புள்ளிகளில் நிறைவு!!

சரிவிலிருந்து மீண்ட இந்திய பங்குச்சந்தை! நிப்டி 17503; சென்செக்ஸ் 58664 புள்ளிகளில் நிறைவு!!

இந்தியா, முக்கிய செய்திகள், வர்த்தகம்
கடந்த நான்கு நாள்களாக சரிவு கண்டிருந்த இந்தியப் பங்குச்சந்தைகள் செவ்வாய்க்கிழமை (நவ. 23) ஏற்றத்துடன் நிறைவு பெற்றுள்ளன. ஐடி, உலோகம், எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் லாப நோக்கத்தில் பங்குகளை விற்க ஆரம்பித்தது உள்ளிட்ட காரணங்களால் கடந்த நான்கு நாள்களாக இந்தியப் பங்குச்சந்தைகளில் நிலையற்றத் தன்மை காணப்பட்டது. வாரத்தின் முதல் நாளான திங்களன்றும் (நவ. 22) இந்திய பங்குச்சந்தைகள் பெரும் வீழ்ச்சி கண்டிருந்த நிலையில், செவ்வாய்க்கிழமையும் லேசான சரிவுடன் தொடங்கியது. சிறிது நேரத்தில் சந்தைகள் மெதுவாக ஏற்றம் காணத் தொடங்கின. வர்த்தகத்தின் இறுதியில் மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 198.44 புள்ளிகள் (0.34%) அதிகரித்து, 58664.33 புள்ளிகளில் நிறைவு பெற்றது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 86.80 புள்ளிகள் (0.50%) அதிகரித்து, 17503.30
டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்திற்கு மூடுவிழா?

டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்திற்கு மூடுவிழா?

இந்தியா, முக்கிய செய்திகள், வர்த்தகம்
கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்தை மூடிவிடும் திட்டத்தில் இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. உப்பு முதல் சாப்ட்வேர் வரை 100க்கும் மேற்பட்ட தொழில்துறைகளைக் கொண்டது டாடா குழுமம். இந்தக் குழுமத்தின் டிசிஎஸ், டாடா மோட்டார்ஸ் உள்பட 29 நிறுவனங்கள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ளன. தொலைத்தொடர்பு துறையில் ஏற்பட்டுள்ள கடும் போட்டி காரணமாக கடந்த சில ஆண்டாகவே டாடா டெலிசர்வீசஸ் (மஹாராஷ்டிரா) நிறுவனம் கடும் நெருக்கடியில் தவித்து வருகிறது. சுமார் 31 ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமையில் இருப்பதாக கூறப்படுகிறது. மறுகட்டமைப்புக்கு வாய்ப்பு இல்லாத நிலையில், 5000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வுத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும் பேசி வருகிறது. இது தொடர்பாக டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது, ''டாடா