Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Telangana

ஆந்திரா: பாஜகவின் மோடி மஸ்தான் விளையாட்டு ஆரம்பம்!#NoConfidenceMotion

ஆந்திரா: பாஜகவின் மோடி மஸ்தான் விளையாட்டு ஆரம்பம்!#NoConfidenceMotion

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
ஆந்திரா மாநிலத்தில் தெலுங்குதேசம் கட்சிக்கு நாலாபுறமும் முட்டுக்கட்டைகள் பெருகி வருவதை மிக தாமதமாக உணர்ந்து கொண்ட பிறகே, சந்திரபாபு நாயுடு மத்திய அமைச்சரவையில் இருந்தும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் வெளியேறியிருக்கிறார். கடந்த 2014ம் ஆண்டு நடந்த மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தலின்போது பாஜகவின் புதிய பங்காளியாக இணைந்து கொண்ட சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, இன்று மத்திய பாஜகவுடன் உடனான உறவை முறித்துக் கொண்டுள்ளது. அரசியல் சதுரங்கத்தில் ஒவ்வொரு காய் நகர்த்தலின் பின்னணியிலும் வாக்கு வங்கி, சுயலாபமே மேலோங்கி இருக்கும். மக்கள் நலன், மாநில சுயாட்சி என்பதெல்லாம் அதற்கான சப்பைக்கட்டு வாதமே. மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறியதற்கு இரண்டு காரணங்களை முன்வைக்கிறது தெலுங்கு தேசம். ஒன்று, ஆந்திராவிற்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கப்படாதது; இன்னொன்று,
”தமிழகத்தில் ஆயுத புரட்சி வெடிக்கும்!” – விவேக் மாவோயிஸ்ட்

”தமிழகத்தில் ஆயுத புரட்சி வெடிக்கும்!” – விவேக் மாவோயிஸ்ட்

அரசியல், சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழகத்தில் ஆயுதப் புரட்சி வெடிப்பதற்கான சூழல் உருவாகும் என்று 'இந்திய கம்யூனிஸ்ட் - மாவோயிஸ்ட்' கட்சியின் முக்கிய தளபதியான விவேக் கூறினார்.   மாவோயிஸ சித்தாந்தத்தைப் பின்பற்றும் சிபிஐ - மாவோயிஸ்ட் கட்சியின் தமிழகத்தின் முக்கிய தளபதிகளுள் ஒருவரான விவேக் என்கிற விவேக் மாவோயிஸ்ட், தான் எழுதி வரும் நூல் ஒன்றின் மொழிபெயர்ப்பு பணிகளுக்காக கடந்த மாதம் (ஆகஸ்ட்) சேலம் மாவட்டம் ஆத்தூருக்கு வந்திருந்தார். தகவல் அறிந்து நாமும் அவர் தங்கியிருந்த, தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்  ராஜலிங்கத்தின் வீட்டிற்குச் சென்றிருந்தோம்.   அது ஒரு மழை நாள் இரவு. கியூ பிராஞ்ச் மற்றும் உள்ளூர் காவல்துறை என பத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் சாதாரண உடையில், அவர் தங்கியிருக்கும் வீட்டிற்கு சற்று தொலைவில் இருந்து கண்காணித்துக் கொண்டிருந்தனர். நாம் சென்றதையும் மோப்பம் பிடித்துவிட்ட உளவுத்த